பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ ஞாலம் போற்றிடும் ஞாயிற்றுக்கிழமை 1. பராக்... பராக்... ! முகப்புக் கூடத்தின் நிலைப்படியில் இளஞ்சூரியன் கதிர் முத்தங்கள் முத்தம் பதிக்கத் தொடங்குகின்றன. வெள்ளை நிறத்துப் பூனை பாலுக்குக் காவல் இருக்க வேண்டிய கடமைப் பொறுப்பினை எதிர்பார்த்து ; பார்வதியை வளைய வளையச் சுற்றி வந்தது. பார்வதிக்குக் கொட்டாவி பறிகிறது கண்களில் எரிச் சல் மூண்டது ; அரை நாழிப் பொழுதிற்காகிலும் படுத்து எழுந்தால், உடம்புக்கு கொஞ்சத்துக்குக் கொஞ்சம் கல கலப்பாக இருக்கும். நேரம் எங்கே இருக்கிறது ? ஆற்றா மையில் முதிர்ந்த தள்ளாமையை விலக்கிவைத்து விட்டு, அடுப்படியில் ஒடியாடித் தோசை சுட்டுக்கொடுத்து விட்டாள் அம்மா. அவள் உடம்பிற்கு இதுவே பெரிய காரியம். எல்லாருக்கும் காலையில் டிஃபன் பரிமாறினாள். தேங்காய்ச் சட்டினியைத் தாராளமாகவே ஊற்றினாள். நல்லெண்ணெய் வாசனை நெஞ்சுக்குழியில் இன்னமும் வீசுகிறது. அப்பாவுக்கு உடம்பு மோசமாகக் கெட்டு விட்டது. உள்ளத்துக்குச் சிக்கு இல்லையானால், உடம்புக்கு எந்தக்கேடும் வராது ஒரேயொரு தோசையை கிள்ளக் குதறித் தொண்டைக்குள் இறக்குவதில் அவருக்கு முகமெல்லாம் வேர்த்துக்கொட்டி விட்டது - அப்பாவுக் கும் அம்மாவுக்கும் இப்படியெல்லாம் முடியாமல் போய் விடுவதற்கு ஆதியும் அந்தமுமான காரணம் இந்தப் பாவிதான் :-"நம்மபாரு குட்டிக்கு எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரமாய்க் கல்யாணம் முடிச்சு வைக்கிறோமோ,