பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 G வேளை தப்பிய வேளையில் தனக்கு உண்டான சோதனையான அவசர ஆத்திரத்திலே, இப்படியொரு கரடிச் சோதனையா எனத் தவித்த நிலையில், தோழியைச் சற்றே கூர்ந்து பார்த்ததும், அவளையும் அறியாமல், 'ஒ: - அந்த மாதங்கிதானா நீ ?' என்று கேட்டு, ஆனந்தப் பரவசத்தோடு கூவி விட்டாள் பார்வதி. கூதல் காற்று பேசியது நீ கல்யாணம் கட்டிக்கினியா ? கார்மோகினியின் விசாரிப்பு. “அது ஒண்ணுதான் குறைச்சல் ' ஏழைப் பார்வதி யின் ஏழ்மையான பதில். ‘'நீ அப்படியெல்லாம் சொல்லப்படாது ' 'நான்தான் அப்படிச் சொல்லவேணும்; சொல்லவும் முடியும் சரி, உன்னோட மாரேஜ் எல்லாம் முன்னா டியே ஜாம்ஜாம்னு நடந்திருக்கும் ; நீ பெரிய இடத்துப் பெண் ஆச்சுதே ?' என்று வினவினாள் பார்வதி. மாதங்கியின் புன்சிரிப்பில் பெருமிதமும் இருந்தது. 'வர் ற வைகாசியில்ே என் மாரே ஜும் முடிஞ்சுடும் !' என்றாள், பேச்சு வாக்கில் கனமாக இழைந்திருந்த சங்கிலியை வெளி மார்பில் வெளிப்படையாகவும் எடுப் பாகவும் போட்டுக் கொண்டாள். - ப்யூ!... டாலர்கூட இல்லாத வெறும் சங்கிலிதானா?... அது போகட்டும் : இந்தச் சிங்காரிக்கு இன்னும் சிக்கன மாக யாருமே ப்ளவுஸ் தைச்சுக் கொடுக்கல்லே போலி ருக்குது’ - பழைய ந ட் பி ல் வேண்டுமென்றேதான் அவளோடு ஒருமையில் பேசினாள். அவளும் திருத்த வில்லை! - அப்படியானால், மாதங்கி இன்னமும் திருந்த வில்லையோ - பார்வதி விழிவழி நடத்தாள்.