பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52


வந்து நின்ற தாய்ப்பிச்சைக்காரி பல் எல்லாம் தெரியக் காட்டிக் கெஞ்சினாள். பத்துப் பைசாவை இனம் கண்டு கொண்டு பிச்சைக் காரியால் அவளை இனம் தெரிந்து கொள்ள முடிய வில்லை : ஒரு வேளை காற்றில் கலைந்த கழுத்து துணியிலிருந்து தலை நீட்டிய கழுத்துச் சங்கிலியைத் தாலிச் சங்கிலியென்று அவள் அனுமானம் செய்திருக்க வேண்டும் நீள்மூச்சு வெகு நீளமாகவே பிரிந்தது. வெளிச்சத்துக்கு நடுவில் இருட்டு தன்னைத் தேடிக் கொண்டிருந்த வேளை தப்பின வேளை அது பாதங்கள் பரபரத்தன. "பார்வதி !” குரல் கேட்டது. நிதானமாகத் திரும்பினாள். அங்கே, தாரா ... ! பார்வதியின் பாவனைகள் மிகுந்த முகம் அருவருப் படைந்தது. தாரா என்றால் புதிர் எனவும் அர்த்தம் இருக்கலாம் ! உங்களைப் பெற்றவங்களைச் சாட்சி வச்சுப் புருஷன் - பெண்சாதி ஆகிவிட வேண்டியது தானே ? அப்புறம், பிரச்சனைக்கு என்ன வேலை இருக்க முடியும் ?” 'பிரச்சனையே அங்கேதானே இருக்குது ?” "என்ன சொல்லுகிறே நீ, தாரா ?' 'உள்ளதைத்தான் சொல்லுகிறேன் !' "இன்னம் சொல்லலையே'