பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

"சொல்லிடுறேன். பார்வதி ; எங்களோடது கலபபுக் கலியாணமாக்கும்! வாஸ்தவந்தான் ! - கலப்புக்காதல் நியாயந்தான்; முடியவேண்டியதும் நியாயந்தான்! தவிரவும், கலப்புத் திருமணத்திலே பாரத சமுதாயத்தோட சீர்த்திருத்தம் மட்டிலும் அடங்கியிருக்கல்லே; நம்ம அரசாங்கத்தோட சீர்த்திருத்தம் மட்டிலும் அடங்கி யிருக்கல்லே, நம்ம அரசாங்கத்தோட தமிழ்ப்பண்பாடு தழுவின ஆதரவும் பாராட்டும் கூட அடங்கியிருக்குதே, தாரா? ?

"ஆனால்...?"

'என்ன பயமுறுத்துறே"? நான் ஒண்னும் பயமுறுத்தல்லே, பாரு! -எங்களுக்கு வாய்ச்ச சூழ்நிலைதான் எங்களைப் பயமுறுத்துது!

"விபரம் புரிஞ்ச பொண்ணு நீ ; கொஞ்சம் விவர மாய்ச் சொல்லேன், தாரா !”

"உன் கையிலே அவசரமா ஒரு யோசனை கலக்கணும்னு அங்கே பார்க்கிலே அவர் இருக்கார்! உனக்காகக் காத்துக்கிட்டு இருக்கார் அவர்! "

"எவர்?"

"அவர்தான்-மிஸ்டர் செந்தில்!”

"அவரோட வீடு...ஊகூம், பங்களா எங்கே?"

"130, க்ரீன்வேஸ்ரோடு, அடையாறு, சென்னை." ஓ...அப்படியா யார் அவர் ?

"அவர்தான் செந்தில், பார்வதி!"