பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57


உணர்ந்தவள், நின்றாள் : "தாரா ... நான் வெறும் மனுவி... வெறும் பார்வதிதான் என்னைப் பெற்றவங் களோட கடைசிக்கால ஆசையைப் பூர்த்தி செய்யக் கடமைப்பட்ட நான், எனக்கு உண்டான ஒரு நல்ல வழியைத் தேடிக் கண்டு பிடிக்க இன்னமும் முடியாமல், நானே திண்டாடித் தவிச்சுக்கிட்டு இருக்கேன் ... காதல் என்பது புரட்சிக்கு மறுபேர்னு நானும் கூட வாசிச்சிருக் கேன், ஆனாலும் நடைமுறை நியாயத்துக்கும் தர்மத்துக் கும் பொருந்தாத பொருந்த முடியாத - பொருந்தவும் கூடாத இந்த மாதிரியான அபத்தமான, அசிங்கமான புரட்சி விவகாரமெல்லாம் எனக்கு உடன்பாடில்லே! நான் வர்றேன், தாரா தீர்ப்பைச் சொல்லிவிட்டு நடந் தாள். அம்மாவும் அப்பாவும் அவளுடைய ஜோடிக் கண் களிலும் ஜோடியாகவே நின்றார்கள். என்னைப்போலவே உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த செந்தில்நாதன் எனக்காகக் காத்துக்கிட்டிருப்பார் !' 'பேஷ்...பேஷ் !' 'நானும் செந்திலும் ஒருத்தரை ஒருத்தர் உயிருக்கு உயிராகவும், உயிருக்கும் மேலாகவும் நேசிக்கிறோம் பார்வதி !' "ஓஹோ அப்படியா !” "ஆமா !” "சரி ; உங்க ரெண்டுபேரோட காதலும் உயிரளவிலே தான் இதுவரைக்கும் ஐக்கிப்பட்டிருக்குதா ? இல்லே-' பார்வதி கேள்வியை முடிப்பதற்குள்ளே - தாரா பதிலை ஆரம்பித்தாள் ; எங்களோட காதல் பவித்திரமானது ; பரிசுத்தமானது ; அதனாலேதான், அது இது வரையிலும் எங்களோட உயிர் அளவிலே