பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58


யும் மனசின் அளவிலேயும் ஒன்றிக் கலந்து உறவாடிக்கிட்டே இருக்குது , மற்றப்படி, எங்க காதல் இந்த நிமிஷம் வரை எங்க உடல்களைத் தொற்றவே இல்லை ; அப்படி தொற்றவும் நாங்க விடமாட்டோம்!நட்பின் பேராலே மனம் விட்டுப் பழகிப் பேசிகிட்டு இருக்கத்தான் நாங்க லாட்ஜ் பிடிச்சோம் ! என்னை நம்பு, பாரு !', என்றாள். தோழிகள் நடை பயின்றனர். இப்போது அவள் கண்களும் நனையத் தொடங்கினl"தாரா பெண் என்கிறவள் பூவாக இருக்கிறதிலேதான் புண்ணியம் உண்டு என்கிற வாதத்திலே இருக்கிற நியாயம், பெண் என்பவள் பூ நாகமாக இருக்கிறதாலே பாவம் இல்லை என்கிற பிரதிவாதத்திலேயும் இருந்தாக வேணாமாக்கும் ?” தஞ்சாவூர்த் தலையாட்டி பொம்மையென தாரா தலையை ஆட்டினாள். சரி-நீ இப்ப என்னை என்ன செய்யச் சொல்லுறே?சொல், தாரா, சொல் ' விதிக்குக் கேள்வி கேட்கத்தானா தெரியாது ? 'நீ என்னோடு அந்தப் பார்க் மட்டுக்கும் வரனும், பாரு அங்கேதான், காலை வெய்யலில் பதிப்பகத்தின் முன்னிலையில் நடுத்தெருவில் தாராவும், அவளுக்குத் துணை நிழலாக வந்த செல்வப்பிள்ளை செந்திலும் துணை பிரிந்து- ஜோடியும் பிரிந்தும் ஸ்கூட்டர் விபத்துக்கு ஆளான சங்கதியை அவள் சற்றுமுன் காலாற நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதும் கூட நினைத்துப் பாாத்து சலனம் அடைந்ததும் பொய்