பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60


திசைக்குத் திரும்பியது. 'தாரா, கொஞ்சம் முந்தி நீ என் கையிலே சொன்ன தாக்கல் தகவல் எல்லாம் சுத்தமான பேச்சுத்தானே ?' என்று வினாவினாள். “சுத்தமான பேச்சு மட்டும் இல்லே ; சத்தியமான நடப்பும்தான் என்பதாக உறுதி மொழிந்தாள் தாரா. 'சத்தியத்துக்குத் தருமம் என்கிற முதல் மரியாதையும் உண்டுண்ணு நம்புறவள் நான் !’ 'நானும் அப்படித்தான் நம்புவேன் !' "ஆல்ரைட் இப்ப நான் என்ன செய்யட்டும் ? சொல் தாரா !” 'உன் தேவ சபையிலே, நீதான் எங்களுக்கு நல்ல வழியைக் காண்பிக்க வேணும்.' 'எனக்கு உண்டான ஒரு நல்ல வழியைத் தேடிக் கண்டு பிடிக்க இன்னமும் முடியாமல் நானே திண்டாடித் தவிச்சுக்கிட்டு இருக்கேன் ; இந்த லட்சணத்திலே, அந்நியோன்யமான உங்க காதல் விவகாரத்திலே, அந்நியமான நான் எந்த நல்ல வழியைச் சொல்லித் தர முடியப் போகுதோ, விளங்கல்லையே ? சரி, சரி ; "டைம்’ ஆச்சு ; விஷயத்துக்கு வா, தாரா !” "நானும் செந்திலும் மனமாரவும் மனப்பூர்வமாகவும் காதலிக்கிற மாதிரியே, கல்யாணமும் பண்ணிக்கிட முடிவு செஞ்சிருக்கோம் !” அப்புறம் என்னவாம் ? - ஒரு முகூர்த்த நேரத்தைக் குறிச்சு நீங்க ரெண்டு பேரும் கலியாணத்தை செஞ்சிக்க வேண்டியதுதானே ! - எங்க கலப்புக் கலியாணத்துக்கு எங்களோட பெற்றோர் சம்மதம் தெரிவிச்சுப் பச்சைக் கொடி