பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61


காட்டிடுவாங்கண்ணு எங்க ளு க்கு த் தோணவே இல்லை ! ... அதனாலே ...” 'அதனாலே ...' 'அதனாலே, நானும் செந்திலும் உன்னையே சாட்சி வச்சு, முப்பாத்தம்மன் சந்நிதானத்திலே கல்யாணம் பண்ணிக்கிட வேணும்னு தீர்மானிச்சிருக்கோம், பாரு ' இருந்திருந்தாற்போல அங்கே பரவத் தொடங்கிய பயங்கரமான மெளனத்தை மென்று விழுங்கியவாறு, தீர்ப்புப் படிப்பது போலக் கூறினாள் பார்வதி : 'தாரா, மிஸ்டர் நீயும் செந்திலும் மேஜர் ஆணவங்க; சட்டப்படி, சுதந்திரம் ஆணவங்க ; அதனாலே உங்க காதலுக்குக் குறுக்கே நிற்கிறத்துக்கு எந்தச் சக்தியாலேயும் முடியாது; முடியவே முடியாது!’ ஆனாலும் உலகசம்பிர தாயத்தை மறந்து, உங்களுக்குண்டான கண்ணியமான - கட்டுப்பாடான கடமையையும் மறந்து, நீங்க இரண்டு பேரும் உங்களோட அருமையான பெற்றோர்களைத் துறந்து, நீங்க உங்க மனம்போன போக்கிலே, அம்பாள் சந்நதியிலே கணவனும் மனைவியுமாக ஆகிடணும்னு முடிவு செஞ்சிட்ட இந்தக் கலியாணத்திலே என்னை எதுக்கு சாட்சியாக இழுத்து, வம்புக்கு இழுக்கிறீங்க ? காதல் என்கிறது புரட்சிக்கு மறுபேர்ணு நானும் அறிவேன். ராமையாப் பயல் மேல்மூச்சு - கீழ்மூச்சு வாங்க ஓடி வருகிறான் : 'அம்மாவுக்கு மறுபடியும் வழக்கமான நெஞ்சுவலி வந்திடுச்சு, நல்ல காலமா அப்பா வீட்டிலே இருந்திட்டாங்க, ஒடிபோய் மருந்து வாங்கியாந்து குடுத் தாங்க. இப்பத்தான் நம்ம அம்மா அசந்து கண்ணை மூட ஆரம்பிச்சிருக்காங்க. ரொம்ப நேரமாகியும், நீ வீடு திரும்