பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 'மறந்திட்டேம்மா!' "எல்லாக் கணக்கும் தெரியறவருக்கு இந்தக் கணக்கு மாத்திரம் தெரியாமல் போயிடுமா ?” எழுந்து அமர்ந்து மாத்திரையை விழுங்கித் தண்ணி ரைக் குடித்ததும், "அம்மாடி ! உன்னோட கலியானத்தை எங்களாலே முடிஞ்சவரையிலும் நல்லபடியா நடத்தி வைக்க வேண்டியது எங்க பொறுப்பு. தம்பிப் பயல் கல்யாணம் உன் கையில்தான் இருக்கு; மறந்திடா தேம்மா !' என்று வேண்டினாள். "மறந்திட மாட்டேம்மா நான் சொல்றேன், பாருங்க, தம்பி கல்யாணத்தை என்னோ டே சேர்ந்திக் கினு நீயும் அப்பாவும் ஜோடியா நடத்தி வைக்கத்தான் போlங்க - என்னை நம்பு, அம்மா - ஏன், தெரியுதா? - நானும் தெய்வத்தை நம்புறவள்' தாய்க்காரிக்குத் துரக்கம் சொக்கியது. சிவகாமிக்கு உறக்கம் பிடித்தால், ஆத்மநாதனுக்கு மட்டும் உறக்கம் பிடிக்காமல், போகலாமோ ? குறட்டைச் சித்தம் ேஜ டி சேர்ந்தது ஜோடி சேர்த்தது. ஈஸ்வரா ! ..., s தே-5