பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67


வயிற்றுப் பசியையும் மீறின உள்ளக் குழப்பத்தால் உந்தப் பட்டு குட்பை" போட்டு விட்டுப் பெண்மைச் செருக் கோடு வெளி யே றி ய தினங்களையும் மறந்துவிட மாட்டாள் - பாவம், ஒரு பார்வதிக்காக ஒரு தேவதாஸ் தானே பிறந்திருக்க முடியும்?-அம்மாடி பார்வதிப் பொண்ணே ! உன் தங்கக் கழுத்திலே ஒரு மஞ்சள் கயிறு விழுகிற வரைக்கும் நீ பிறத்தியார் கண்ணிலே விழுந் திடாமல், மானம் மரியாதையோடவும் வைராக்கிய ரோசத்தோடவும் ரொம்பவும் ஜாக்கிரதையாக ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு யுகமாட்டம் கழிச்சாகனும் !-உலகம் பொல்லாதது ; அதைக் காட் டிலும் பொல்லாதது தமிழ்ச்சமூகம் !-இவ்வாறாக, அப்பாவும் அம்மாவும் பாடம் படித்துத் தரவில்லையா?காதல்ாம் காதல் !...இந்தக் காதலின் நிலை என்ன ? விலை என்ன ? கதி என்ன ? விதிதான் என்ன ?...கள்ள மார்க்கெட்டிலும் இந்தக் காதல் விவகாரம் செல்லுபடி ஆகிறதோ ?...அது, கிலோ என்ன விலையாம் :-நமட்டுச் சிரிப்பில் பொலிகிறாள் ! ஜாதிமுல்லையின் தனிமணம் தனிதான் ! பிதுங்கி வழிந்த காதலை அதே கூட்டுக்குள்ளே போட்டுத் திணித்து அடைத்த அமைதியோடு. வீட்டுக் கதவைப் பூட்டிச் சரிபார்த்துவிட்டு உட்புறம் அடியெடுத்து வைத்தாள் அவள். ஆத்தூரில் கத்தி முனையில் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பாவப்பட்ட செய்தி அவள் பார்வையில் பட்டுத் தொலைத்து, மறுபடி பய முறுத்தியது ; குலை நடுங்கினாள். பத்திரிகையைப் பார்வைக்கு மறைவாகப் பரண் மீது வீசிவிட்டு நகர்ந்தாள். “ட்யூப்லைட் அணைந்தது. - இப்போது நேரம் : பதினொன்று, நாற்பது. உள்ளே :