பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ös அம்மா வுக்கும் அப்பாவுக்கும் நடுவில் தாராளமாகக் கிடந்த இடைவெளியில் தாராளமாகப் பாயை விரித்தாள் பார்வதி. திடீரென்று அலறல் ஒலி. திரும்பவும் ஒளி திரும்பியது, 'நெஞ்சு வலி வந்திடுச்சு வலி தாள முடியல்லியே!... ஐயையோ ... ! கடவுளே !' அப்பா துடிதுடிக்கிறார். பார்வதி பதை பதைத்தாள். விழிப்படைந்த சிவகாமி ; உயிரும் உடலும் பதறிய வளாக அத்தானின் மெலிந்த நெஞ்சைத் தேய்த்து விட்டாள். ஊசலாடிய மாங்கல்யம், கண்ணிர்ச் சரம் தொடுத்தது. மூக்கை உறிஞ்சுக் கொண்டாள் ; 'நெஞ்சு வலிக்கு மாத்திரை வச்சிருப்பியே, பாரு ?’ என்று ஆவலோடு கேட்டாள். இருக்கணும் !" என்று கூறி எழுந்தாள் புதல்வி. நோயின் உறவுமுறையிலும் கூட அப்பா - அம்மாவுக்கிடையே ஏக ஒற்றுமை ! நெஞ்சுவலிக்கான மாத்திரைகள் இருந்த டப்பா காலியாக இருந்தது. திரும்பிய பார்வதி, மாத்திரை தீர்ந்திடுச்சுப் போலே. நான் ஒடிப்போய் வாங்கிட்டு வந்திடுறேன் ; நீ அப்பாவை பத்திரமாய்ப் பார்த்துக்க, அம்மா' என்று சொல்லி, துட்டு எடுத்துக் கொண்டு புறப்பட எத்தனம் செய்தாள்.