பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(iii) தமிழச்சி அவள் - அவளே கன்னித் தொழுவப் பொற் சுடராகவும் திகழ்கிறாள் ! - அவள் கதை புதியது ; புதுமையானது ; புரட்சியானதுங்கூட - ஆமாம், உண்மைதான் ! - புதிய பூபாளத்தின் பொன் விடியல் ஆயிற்றே பார்வதி !. பெண்ணைப் பற்றி நிரம்பவே சொல்லி விட்டவன் நான். நான் மட்டிலுந்தானா ?-ஆமாம் ; என்னுடைய கதைகளும் கூடத்தான் ! இன்னமும் சொல்லட்டுமா :-பாடட்டுமா ? "விதியின்நாயகி பெண்ணென்றால் - அவளே விதிக்கும்நாயகி ஆகிவிடுவாள் ! அருமைமிகு பெண்மைக்குப் பேர்சொல்லி - உலகில் பெருமையுற வாழ்ந்துகாட்டிப் பேரெடுப்பாள் ! எட்டிநின்றால் பெண், மாயப்புதிரேதான் ! அவளை ஒட்டிவந்தால், அவளே புதுமையன்றோ ! சோதனையும் புதிருமே புவனமென்றால் - அவள் சோதனைக்கும் புதிருக்கும் விடையாவாள் ! பொறுமைக்கு அவள் தாயாவாள் - உலகச் சிறுமைக்கு அவளே தியாவாள் ! அள்ளியணைத்தால், அவள்குழந்தை :-அவளே கிள்ளியணைத்தால், நாம் குழந்தை ... தமிழ்ப் படைப்பு இலக்கியத்தின் புதினத்துறைக்குப் பேர்சொல்லி - உங்கள் பூவையின் பெயரைச் சொல்ல இப்போது என் பார்வதியும் மனம் கொடுத்துக் கைக் கொடுத்திருக்கிறாள் - நம் அருமைத் தமிழ்ச் சமுதாயத் திற்கு அவள் விதியாக மட்டுமல்லாமல், சவாலாகவும் தலை நிமிர்ந்து நிற்கிறாள் ! என் அருமைப் பார்வதி உங்களுக்குத் தெரிந்தவள் தான் !-'தாய் அன்று பழக்கப்படுத்தியவள் பெருமை மிகு அன்புப் பார்வதி !...