பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ii) 'சுவாமியே சரணம், ஐயப்பா !' - நாமணக்க பூ மணக்க அழைக்கிறேன் ! நெய்மணக்கத் தரிசனம் தருகிறான், பூர் ஐயப்பன் 1 - ஆஹா !. "அங்கிங்கெனாதபடி, எ ங் கு ம் பிரகாசமாய் ஆனந்தப் பூர்த்தியாகி விளங்குகின்ற ஆண்டவன் ஒரு விளையாட்டுக்காரன் என்பதனாலேயே, வாழ்க்கையும் ஒரு விளையாட்டுத்தான் என்பதாக விதிக்கப்பட வில்லையே ? - மதிக்கப்படவில்லையே ? வாழ்க்கை ஒரு சத்தியச் சோதனை - சத்தியம் சோதிக்கும்போதும், அந்தச் சத்தியம் சோதிக்கப்படும் போதுதான், வாழ்க்கை, வாழ்வாங்கு வாழுகின்ற வாழ்க்கையாக அமையும் அமையமுடியும்; அமையவும் வேண்டும். . வாழ்வதற்காகவே விதிக்கப்பட்ட சட்டபூர்வ மானதும் ஆத்மார்த்தமானதுமான வாழ்க்கை - பொய் யான இம்மண்ணிலே நடக்கும், அல்லது, நடத்தப்படும் மெய்யான வாழ்க்கை - உண்மையும் யதார்த்தமும் சமூகப் பிரக்ஞையுடன் இரண்டறக் கலந்த அசலான ஒரு கதையே அல்லவா ? ஆடி அடங்கும் இந்த வாழ்க்கைக் கதை' - ஆடி அடங்காத இந்தக் கதை வாழ்க்கை”யின் சித்திர விசித்திரங்கள் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் என்ப தில்லை ! - எனக்கும் வெளிச்சம்தான் ! இந்த உண்மைக்கு - சத்தியத்துக்கு - தர்மத்துக்கு உதாரணமாகவும் உத்தாரணமாகவும் விளங்குகிறாள் பார்வதி என் பார்வதி ! - தேவலோகப் பாரிஜாதப் பூ மண்ணிலும் மலர்ந்து மணம் பரப்பும் என்பதற்கு நிதர் சனச் சாட்சியமாகப் பொலிந்திடும் தமிழ்ச் சாதி