பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் முன் உரை மாண்புமிகு பார்வதி . . . ! படைப்பின் தவமே ஒரு தத்துவம் ஆகிறது. அதுவே படைப்பிற்கு ஒரு விதி ஆகவும் அமைகிறது - அமைக்கப் படுகிறது ! - ஆகவேதான், படைப்பவன் சூத்திரதாரி யாகவும், படைக்கப் படுகிற ஜீவன்கள் அலகிலா விளையாட்டுடைய அந்தச் சூத்திரதாரியின் விளை யாட்டுப் பொம்மைகளாகவும் ஆகின்றன ; ஆக்கப்படு கின்றன. இதுவே, உலகத் தர்மத்திற்குப் பொதுவிதி யாகவும் அமையும். உலக வாழ்க்கையின் பொதுநியதி யும் இதுவே அல்லவா ?... ஆனால், நானோ எதார்த்தமான இந்தப் பூதலத்திலே மண்ணையும் விண்ணையும் படைத்த முதல் பிரம்மா வுக்குப் போட்டியான இரண்டாவது பிரம்மாவாக இயங்கவும் இயக்கப்படவும் தொடங்கி, நாற்பத்தாறு ஆண்டுகளைத் தாண்டிவிட்ட இந்தப் பொன்னான வேளையிலே, எனக்கு நானே விதியாக ஆகவும் நேர்ந் திருக்கிறது ! - விதியென்றால், விளையாடத் தெரியவேண்டாமா, என்ன ?- எனவேதான், நான் இப்போது என் விதி யோடு மட்டுமல்லாமல், என் வினையோடும் விளையாடிக் கொண்டிருக்கிறேன் ! விளையாட்டென்றால், சாமான்யப் பட்ட விளையாட்டா, என்ன ? - Tவமரணப் போரட்டத்தின் சித்திர - விசித்திர விளையாட்டு ஆயிற்றே ... இடுக்கண் வரும்பொழுது சிரிக்கத்தான் சொன்னார், தெய்வப் புலவர் 1 - ஆனால், நான் சிரித்துக் கொண்டே அழுகிறேன் ; அழுது கொண்டே சிரிக்கிறேன் -