பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87


'நூத்திலே ஒரு பேச்சு. தம்பி; சத்தியமும் அதுதான்: அதுவே தருமமாகவும் இருக்க வேணும்' 'அதிலே இன்னொரு சங்கதியும் உண்டுங்க. அதா வது. சமூகத் துரோகிங்களை முகமூடிகளைக் கிழிச்சு முச் சந்தியிலே நிறுத்திறதிலே சட்டம் இயன்றவரை ஒத்துழைக்கிற மாதிரி, சமுதாயத்தோட நேர்மையான வளர்ச்சியிலேயும் வாழ்விலேயும் உண்மையான ஆர்வமும் அக்கறையும் கொண்ட சீர்த்திருத்தவாதிகளும் முழுமூச் சோட ஒத்துழைப்புத் தரவேணுமுங்க! அப்பத்தான் சமுதாயத்தோட நல்ல ஆரோக்கியம் பேணிப் பாதுகாக் கப் படவும் முடியுமுங்க, அக்கா!' 'பேஷ், பேஷ்!' என்று பாராட்டினாள் பார்வதி. இனி கொஞ்ச நாழிகைக்கு அவளுக்கு அடுப்படியும் அடுப்புப் புகையும்தான் சதம். பார்வதி உணர்ச்சி வசப்படலானாள்; தூயநெஞ்சு தூய்மையான விழிகளை ஊடுறவிப் பாயவே, சுடுநீர் தெறித்தது. தலையை உயர்த்தினாள்: நேர்கொண்ட பார்வையால் தாய் தந்தையரை நோக்கினாள்: 'இஷ்டப் பிரகாரமே நடந்துக்கிடுவேன், அம்மா ... நீங்களும் உங்க மகளை நம்பவேணும் அப்பா!' - தன்னுடைய நிதி நிலைக்கு ஒருசமூக அந்தஸ்தை ஏற்படுத்தி சாட்சி சொன்ன தங்கமான கழுத்துச் சங்கிலியை வருடிய வண்ணம், வண்ணம் மிகுந்த உதடுகளில் முறுவலைச் சிந்திப் பேசினாள் பார்வதி. கூடத்தில் ஒளி வெள்ளம். முகூர்த்த நேரத்தில் மணவறையிலே போய் அமர்ந்து கொள்ளப் போகும் திருமணக் கன்னியாகவே வந்தாள். பார்வதி ! கைகூப்பினாள் ; விழிகளை நிமிர்த்தி விட்டாள்