பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86


முந்தி ஒரு பத்திரிகையிலே அப்பா தொடர்ச்சியாக எழுதின இலக்கிய விமர்சனத்தை என்னாலே எப்பவுமே மறக்க முடியதுங்க, தம்பி. அதையெல்லாம் புஸ்தகமாகப் போட்டால், இன்றையக் காலக் கட்டத்திலே தமிழிலே படைப்பிலக்கியம் எங்கே போய்க்கிட்டு இருந்திச்சு என்கிறதை நாளைய இளைய தலைமுறை புரிஞ்சுக்கிடுறத்துக்கு ரொம்ப ஒத்தாசையாக இருக்குமே ?” 'வாஸ்தவந்தாங்க, அக்கா அந்த விமர்சனத்தை இப்போ இருக்கிறப் பதிப்பகத்துக்காரங்க யாரும் துணிஞ்சு வெளியிட மணந்துணியமாட்டாங்க அதனாலே, அதை நாங்களே வெளியிடப் போறோம் !" பார்வதி ஆத்மார்த்தமாக மகிழ்ந்தாள். 'உங்க ஊர்ப் பக்கத்திலே காப்பித்துாள் வியாபாரத்திலே கலப்படம் செஞ்ச சமூகத்தை ஏமாற்றிக்கிட்டிருக்கும் இரண் டொரு திடீர்ப் பணக்காரங்க இப்ப திடீர்க் குற்றவாளிகளாகிக் கம்பி எண்ணிக்கினு இருக்கிற நடப்பைக் விலம்பறப் பேப்பரிலே போட்டிருந்திச்சே பார்த்திருப் பீங்களே, தம்பி ?' என்று கேட்டாள். 'ஊம்' என்று தலையை ஆட்டினான். மணி. "சமுதாயத்துக்கு மத்தியிலே பெரிய மனுஷங்க என்கிற போலி வேஷத்திலே திரை மறைவிலே இருந்துக்கிட்டுச் சொந்த ஆதாயத்துக்காகச் சமூகக் குற்றங்களைச் செய்யத் துணிகிற சமுதாயத் துரோகிங்களோட முடிவு இப்படித் தான் ஆகுமுங்க : இப்படித்தான் ஆகவும் வேணுமுங்க, அக்காள்!' என்றான். 'சமூகத்தை உருவாக்கிற தனிமனி தர்கள்' செய்கிற தப்புக்கெல்லாம் மனிதர்களை உருவாக்கிற சமூகம்வீணாகப் பழிபாவத்தைச் சுமக்கிறது தெய்வத்துக்கே அடுக்காது என்கிற சமூகப் பிரச்சனை சமுதாயத் தின் மத்தியிலேயும் மக்கள் மத்தியிலேயும் அப்பப்ப அபூர்வமாகி விழிப்படைஞ்சுக்கிட்டு வருவது வரவேற்கத் தக்க காரியம் தானுங்களே ?' என்று முடித்தான்.