பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 மணியும் கையுமாக வந்தான் ராமையா, இந்த மணிக்குக் கோயில் மணியின் அந்தஸ்து இங்கே எப்போதுமே காத்திருந்தது, அவர்களுக்கு வேண்டப்பட்ட பிள்ளை. சமுதாயத்தின் தீவினைக் கலப்படம் துளியும் இல்லாத துல்லியமான அன்பைப் பார்வதி மோப்பம் பிடித்திருக்க வேண்டும் ; நன்றியுடன் புன்னகை செய்து மணியை அன்போடு வரவேற்றாள் ; நலன் விசாரித்தாள். நீங்க எழுதின கண்ணிர் விற்கும் ஜாதி நாடகத்தை எப்போது உங்க சிநேகிதர்களோட அரங்கேற்றம் செய்யப் போlங்க . தம்பி ?’ என்று கேள்வி கேட்டவள், வருகிற ஜூன் முதல் தேதியன்னிக்கு கட்டாயம் ஸ்டேஜ் பண்ணிடு வோம்' என்ற பதிலைக் கேட்டதும் நிம்மதி அடைந்தாள். நீர்மோர் பருகினான் மணி. 'அப்பா நல்லா இருக்காங்களா ?” 'இருக்காங்க இருக்காங்க !' 'நான் பதிப்பகத்துக்கு வேலைக்கு வந்த புதுசிலே ஒரேயொரு வாட்டிதான் அப்பாவை அங்கே சந்திச்சேன்; ஆனாலும், அவங்களோட எழுத்துக்களிலே பெரியவனை அடிக்கடி சந்திச்சுக்கினுதான் இருக்கேன். மனித சமுதாயத்தை சோதிச்சுக்கிட்டு இருக்கிற புல்லுருவிங் களாட்டம். எழுத்துச் சமுதாயத்தைப் பாழ்படுத்தி இன்னமும்கூட கெடுத்துக்கிட்டு இருக்கக்கூடிய எழுத்தாளர் எழுத்தாளிங்க ஒரு அஞ்சாறு பேர்வழிங்களைப்படுத்தி