பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89


"அப்பா என்று விளித்துத் தந்தையை அழைத்தாள் ; 'மாப்பிள்ளை ஸாரோடே பெர்சனலா அஞ்சே அஞ்சு நிமிஷம் பேசுறதுக்குச் சந்தர்ப்பம் கிடைச்சா, நானும் என் கருத்தைத் தெரியப்படுத்த வாய்ப்பாகவும் வசதியாக வும் இருக்கும் !’ என்றாள் பார்வதி. இப்பொழுது : மணமகன் நிலையில் நாராயனும், மணமகள் வடிவில் பார்வதியும் தாழ்வாரத்தில் ஒதுங்கினார்கள். 'பார்வதி, அபாரமான உன் அழகை உன்னோட போட்டோவிலே கண்டதுமே, உன்ம்ேலே காதல் வசப் பட்டுப் போயிட்டேன் நான். அதாலேதான், உன் குடும்பத் தோட கஷ்டமான நிலைமைக்காக மனசு இரக்கப்பட்டு, வரதட்சணை என்கிற மாமூல் பேச்சைத் தப்பித் தவறியும் எடுக்கப்படாதின்னு அப்பாவுக்குச் சட்டம் போட்டுட்டு, உன்னையே கட்டிக்கிடவும் முன் வந்திட்டேனாக்கும் !' என்று மார் தட்டினான் நாராயணன். பார்வதியை விழுங்கி விடுபவனைப் போன்று வெறியோடு பார்க்கவும் தவறவில்லை அவன். அப்படீங்களா ? உங்க இரக்கமே, இரக்கம் !... உங்க ளோட சுயநலக்கலப்பில்லாத இரக்கப்புத்தியை அட்லீஸ்ட் பரமபிதாவேனும் வாழ்த்தாமல் இருக்க மாட்டார் !' என்று புகழ்மாலை சூட்டினாள் பார்வதி. தொடர்ந்து, அது போகட்டும் ; காதல்னா என்னங்க ? என்று வேறு கேட்டு வைத்தாள். 'காதல்னா... காதல்தான் . இது கூடவா உனக்குத் தெரியாது ?" தெரியாமல்தானே கேட்டேன் ; அதுதான் காதல்னா காதல்னு பிரமாதமாய் விளக்கம் கொடுத்திட்டீங்களே,