பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 கம்பியாரூரர் வருந்தித் காமும் உயிர்நீக்கத் துணிகையில் இறைவர் கலிக்காமரை உயிர்பெய்து எழுப்பி அவ்விரண்டு பெரியார்களையும் நண்பராக்கியருளிஞர். சேர அரசராகிய சேரமான் பெருமாள் நாயனர் நம்பியாரூரரை வந்து கண்டு நட்புப் பூண்டனர். அவ்விரு வரும் பல தலங்களேத் தரிசித்து வணங்கினர். ஆருமர் சேர நாட்டுக்குச் சென்று சிலகாலம் தங்கி, அப்பால் திரு வாரூர் வந்தார். பிறகு கொங்குநாட்டில் உள்ள திருப்புக் கொளியூர் அவிநாசியில் முதலே விழுங்கிய பிள்ளையைப் பதி கம் பாடி வருவித்தார். மீட்டும் திருவஞ்சைக்களத்திலி ருந்த சேரமான் பெருமாள் நாயனுர்பால் சென்று தங்கி யிருந்தனர். ஒருநாள் திருவஞ்சைக்களத்துத் திருக்கோயிலுள் சென்று உலக வாழ்க்கையில் தமக்கு இருந்த வெறுப் பைப் பதிகம் பாடித் தெரிவித்தார். சிவபெருமான் தேவர்க ளோடு வெள்ளேயானயை அனுப்பி நம்பியாரூரரைக் கைலாயத்திற்கு அழைத்துவரச் செய்தார். இதனை உணர்ந்த சேர வேந்தர் தாமும் குதிரையில் ஏறித் திருக் கைலாயம் சென்ருர். பரவையாரும் சங்கிலியாரும் கைலை சென்று பண்டைகிலேயில் தொண்டு பூண்டொழுகினர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் கைலாயம் அடைந்த நாள் ஆடி மாதம் சுவாதித்திருநாள் என்பர். பதினெட்டு ஆண்டுகள் சுவாமிகள் பூவுலகில் வாழ்ந்தனர் என்று ஒரு பழம்பாடல் தெரிவிக்கிறது. ஆராய்ச்சியாளர் சுந்தரமூர்த்தி சுவாமி கள் 9-ஆம் நூற்ருண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்தவர் என்று சு.துவர். திருச்சிற்றம்பலம்