பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிடைமருதூர் 157 குற்றங் தன்னெடு குணம்பல பெருக்கிக் கோல துண் னிட்ை யாரொடு மயங்கிக், கற்றி லேன்கலை கள்.பல ஞானங் கடிய ஆயின. கொடுமைகள் செய்தேன், பற்ற லாவதோர் பற்றுமற் றில்லேன் பாவி யேன்பல பாவங்கள் செய்தேன், எற்று ளேன் எனக் குய்வகை அருளாய் இடைம ருதுறை எங்தைபி னானே. கொடுக்க கிற்றிலேன் ஒண்பொருள் தன்னைக் குற்றஞ் செற்றம் இவைமுதலாக, விடுக்க சிற்றிலேன் வேட்கையுஞ் சினமும் வேண்டில் ஐம்புலன் என்வசம் அல்ல, நடுக்கம் உற்றதோர் மூப்புவக் தெய்த கமன்த மர்கா. கத்திடல் அஞ்சி, இடுக்கண் உற்றனன் உய்வகை அருளாய் இடைம ருதுறை எங்தைபி ரானே. - ஐவ கையர் ஐயாவ மாகி ஆட்சி கொண்டொரு கால வர் நீங்கார், அவ்வ கையவர் வேண்டுவ தானுல் அவர வர் வழி ஒழுகிகான் வந்து, செய்வ கைஅறியேன்சிவ லோகா தீவ ணுசிவ னே எரி யாடீ, எவ்வ. கைஎனக் குய்வகை அருளாய் இடைமருதுறை எங்தை பிரானே. 8 ஏழை மானுட இன்பினே நோக்கி இளைய வர்வலப் பட்டிருந் தின்னம், வாழை தான்பழுக் குங்கமக் கென்று வஞ்ச வல்வினே புள்வலைப் பட்டுக், கூழை மாந்தர் தஞ் செல்கதிப் பக்கம் போக மும்பொருள் ஒன்றறி யாத ஏழை யேனுக்கோர் உய்வகை அருளாய் இடைம ருதுறை எந்தையி ரானே. - 9 காலடியிலே போட்டுவிட்டு. பொறை - பாரம். விழித்துஉணர்வுபெற்று. - 7. செற்றம் - பகைமை, - 8. ஐவகையர் ஐயர் அவராகி - ஐந்து வெவ்வேறு வகையி :னவாகிய பொறிகள் தலைவர் ஆகி. - . . 9. இளையவர் - இளைய மங்கையர். ஒருமுறை பழுத்த வாழை மற்ற ம்ரங்களைப்போல மீண்டும் பழுக்கும் என்று எண்ணி ஏமாந்ததுபோல ஏமாந்து. கூழை மாந்தர் - தாழ் -வுடைய மக்கள். - - -