பக்கம்:தேவாரம்-ஏழாம் திருமுறை.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 - சுந்தரர் தேவாரம் ஏராரும்பொழில்கிலவு வெண்பாக்கம் இடங்கொண்ட, காராரும் மிடற்ருனேக் காதலித்திட் டன்பினெடும், சீரா ருந் திருவாரூர்ச் சிவன்பேர்சென் னியில்வைத்த, ஆரூரன் தமிழ்வல்லார்க் கடையாவல் வினைதானே. 11 - .திருச்சிற்றம்பலம்

  • , , , , - நாடு: தொண்டை நாடு

சுவாமி. வெண்பாக்கநாதர்; அம்பிகை, கனிவாய்மொழி. r வரலாறு. திருவொற்றியூரை அகன்று வருகையில் இரண்டு கண்ணும் இழந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் வெண்பாக்கத்துக்கு வந்து தொண்டர்கள் புடைசூழத் திருக்கோயிலை வலம் வந்து இறைவரை வணங்கி, 'இறைவரே, நீர் கோயிலில் உள்ளிரா?” எனக் கேட்க, சிவபெருமான் சுவாமிகளுக்கு ஊன்றுகோல் ஒன்று அளித்து, "உளேம், போகீர்’ என்று அருளினர். அய லான்ாப்போல அவ்வாறு சொல்லவே சுவாமிகள் இப்பதிகத் தைப் பாடினர் (பெரிய. ஏயர்கோன். 378-280.)