பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'92 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) (2) காத்தல் 8 (1.12) உலகங்கள் யாவற்றையும் தாங்கிக் காப்பவர் இறை வர். உலகத்தார்க்கு நடுக்கம் வராமற் காப்பவர் அவர். காப்பவராய் கின்று எல்லாவற்றையும் தாம் காண்கின்ருர், உலகேழையும் கலங்காவண்ணம் காக்கின் ருர். தம் குறை களைக் கூறிச் சாண்புக்கவர் துக்கம், கவலை இவைகளில் ஆழாகவண்ணம் அவரைக் கிருவடி காக்கின்றது. நாம் காகில் வீழாவண்ணம் காப்பவர் அவர். தமது திருவடியைச் சிங்கிப்பவர்கள் வருந்தாவண்ணம் காப்பவர் அவர் ; உலகங் களைக் காப்பது காரணமாக அரவங்களைப் பூண்டுள்ளார் இறைவர். (48) காலம் (68 (116), (118)) (தலைப்பு 8.1 (17) பார்க்க) அங்கியும் சந்தியும், அல்லும் பகலும், இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம், கேற்று, இன்று, நாளை-எனப் படும் காலங்கள் எல்லாமாய் விளங்குகின்ருர் இறைவர். மூன்று காலங்களையும் கண்டவர் இறைவர். ஏழு கிழமை களும் அவரே. (44) குணம் [68 (119)] *எண்குணத்தவன் ஈசன்; எண்ணிறந்த குணத்தினன் ஈசன்; குணப்பெருங்குன்று அவன்; குணமே அவன்; குற்றமில் குணத்தின்ை அவன். பெரியோர்கள் ஏத்தும் குணத்தினன் அவன். வஞ்சவலைப்பாடு இலாத குணத் தினன் அவன். (45) கொள்கை (68 (127) பிரானர் கொலை யானையை உரித்த கொள்கையர் ; கொலை உருவக் கூற்றை உதைத்த கொள்கையர் ; ஈறும், - - -------

  • தன்வயத்தனதல், தாய உடம்பினனதல், இயற்கை உணர் வினனுதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், போருள் உடைமை, முடிவிலாற்றல் உடைமை, வரம்பிலின்பு

முடைமை. (திருக்குறள் 9. உரை)