பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) மனக் கசிவினெடு தமது கழலைத் தொழும் அடியார் கெஞ்சி னுள் இறைவர் விளங்குவார். சிவன் என்று சுத்த மனத் துடன் கூறினல் அவர் நமது தீவினையை ஒழிப்பார்; ஆதலின் அானது ஆயிர நாமங்களை எண்ணுங்கள். இறப்பதற்குமுன் ஈசன்பேர்களைக் கற்று அவரை வாழ்த்தவேண்டு : அப்போதுதான் தீவினையை நாம் மாய்க்கலாம். அத்திருநாமங்களே மகிழ்ந்து ஒகி அழ வல்லார்க்கு இறைவன் அன்பு காட்டி, இன்பு ஊட்டி, தவருது அருள்புரிவான். சங்கரா ! உனது பெயரைப் பரவி நமசிவாய' என்னும் ஐந்தெழுக்கைச் சாவும் தினத்தில் உரைக்கும்படியான பேற்றைத் தந்தருளுக. சிவனுடைய நாமங்களைச் சொல்லிப் பயில்பவர் யாரா யினுஞ்சரி, அவர்களை அனுகாதீர்கள், யமதூதர்களே ! என்று நமலுடைய து தர்களுக்கு ஒர் எச்சரிக்கை செய் கின்ருர் அப்பர் பெருமானர் மீண்டும் பிறந்தால் பிறைகுடும் பிஞ்ஞகன் பேரை மறந்து விடுவேனே என்றும் அஞ்சுகின்ருர் அப்பர். 86. சிவபிரான் தேர் (74) இறைவனுடைய தேர்-சிங்கம், குதிரை பூட்டப் பட்டது; சக்கரங்களைக்கொண்டது; திருவாரூர்த் தேர் விழாவை அப்பர்பெருமான் தரிசித்தனர். 87. சிவபிரான் நஞ்சு உண்டது (75) திருமாலும், பிரமனும், தேவர்களும், அசுரர்களும் நெருங்கிக்கூடிப் பெரிய மலையை மத்தாக்கி அந்த மத்தை வலிய பாம்பாகிய கயிற்றிற்ை சுற்றிக் கடல் அலற, முன்கை நோவக், கோலாகலத்துடன் கடைந்தனர். அப்போது தேவர்கள் அஞ்சி ஒடத், திருமாலின் நிறம் மாறுபட, s