பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) கொக்கிறகு, யானே உரி, மான்தோல், புலித்தோல் அணிந்து ஆடுவர்; கால்வீசி, கைவீசி, எண்டோள் வீசி, ஆயிரங் தோள்கள் வீசி, எரிவீசி, மழுவீசி,ஆடுவர்; அக்கும் அரவும் ஆர்த்து ஆடுவர் ; நீறுபூசிக் கப்ாலிம் ஏந்திப் பிறை குடி ஆடுவர் கழலும் சிலம்பும் ஆர்க்க ஆடுவர். பண்கொண்ட பாடலுடன் ஆடுவர், பஞ்சமப் பண்பாடி ஆடுவர், பலகீதம் பாடி யாடுவர், மறையொலிபுடன் ஆடுவர், பாண்டாங்கக் கூத்து ஆடுவர். பிச்சாடல் ஆடுவார். தேவி கான, தேவி மகிழ, தேவி பாட, தேவியின் ஊடல் தீர்க்க ஆடுவர் ; கங்கையைச் சூடி, கங்கை காண ஆடுவர். கனங்கள் பாட ஆடுவர். காகில் வெண்குழை கமு, சடைகாமு, சடை விரித்து ஆடுவர். காளியின் கோபத்தை அடக்க ஆடுவர்; முயலகன் மீது காள்வைத்து அவன் கோபப்புன்மை அடங்க ஆடுவர். பூதங்களும் பேய்களும் சூழவும், பாடவும், பாணி செய்யவும் ஆடுவர் ; குறட்பூதம் முன்பாடத் தாம் ஆடுவர். பூதங்கள் வேதம் பாட ஆடுவர் ; நரிகள் குழல் செய்ய ஆடுவர். மண் துளங்க, வையம் நெளிய, முகடுகோய ஆடுவர். மண்ணவர், விண்ணவர், தவத்தவர், எண்டிசையோர் தொழ ஆடுவர். குடமுழவம், வீணை, தாளம், கின்னரம், கொடு கொட்டி, கொக்கரை, பறண்டை, மொந்தை, குழல், தடி, முழவு, பறை இவை போன்ற பல்லாயிரம் கருவிகள் முழங்க ஆடுவர். தாாகனே அட்ட பின்பும், திரிபுரத்தை எரித்த பின்னரும் இறைவர் கூத்து ஆடினர்.