பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) (2) தலைவர் நோக்கு : கண் அம்புகொண்டு எய்வது போல உள்ளது. H. (8) தலைவர் பேச்சு: அவர் இட்டம் பேசுவார், கனலப் பேசுவார், சீறிப் பேசுவார், சுவைபடப் பேசுவார், பட்டிமை யும் படிறும் பேசுவார், பித்தர் போலப் பெருமை பேசுவார் மாயம் பேசுவார். (4) தலைவர் ஊர் : கமது ஊர் திருவொற்றியூர் என்பர் ; அவர் சென்ற ஊர் புறம்பயம், அவர் செல்லும் ஊர்கள்-ஆமாத்துார், நல்லூர், நனிபள்ளி, நள்ளாறு, பாசூர், மறைக்காடு, வலம்புரம், விழிமிழலை. அவரது புராதன ஊர் பழன ம். (5) தலைவர் பலிகொள்ள வரும் கோலம் : கோள்மேல் ஐந்தலைய நாகம்; கையில் ஆடாவு, ஒடு, கலைமாலை, புக்ககம், மான், மழு, வீணை, ஆமைபூண்டு, இசைபாடிக் கொண்டு வருவார்; மனத்திலே கள்ளம், கலையிலே முளைக் கிங்கள், கங்கை, கொன்றை ; மார்பிலே முந்தால் அரையிலே கோவணம், பட்டுடை, புலித்தோலுடை ; மேலெலாம் திருநீறு ஏறேறிவருவர், பூகஞ்சூழ வருவர், முனிகணங்க ளுடன் வருவர். I (6) தலைவி தான்கண்ட காட்சியையும் தன் நிலையையும் கூறுதல் : அடிகள் பலி என வந்தார், பலியும் கொள்வ. தில்லை, போவதும் இல்லை; அவர் நோக்கின நோக்கு என் கண்களில் அப்படியே கிற்கின்றது ; பிச்சை இடு என்ருர், வந்து பார்த்தாற் காணுேம், கள்ளவிழி விழிப்பார், தமது இருப்பிடம் ஒரிடமாகச் சொல்கின்ருரில்லை. கனவில் அவரைப் பார்த்தேன். பார்த்தது முகல் அவர் என் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை. நீர் கள்ளரோ புகுந்தீர் என்றேன் ; அதற்கு அவர் சிரித்து, இல்லை நாம் வெள்ளர் தாம் என்ருர் என் கை வளையை ஒன்ருென்ருக எண்ணிப் பார்த்தார். இனி ஒருநாள் நான் அவரைப் பார்த்தால் அவரை என் மார்பகத்தே அனைத்து அவரைப் போக ==