பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) 5. அன்பிலாலந்துறை வயல்களும் பொழில்களும் குழ்ந்த் தலம். இத்தலத்துப் பெருமானை மறவாமல் அன்புடன் தொழுது போற்றுங்கள்; அங்ங்னம் போற்றுபவர் மெய்யர்கள், அறிஞர்கள்; அவர்கள் வினை மாயும். இத்தலத்தை வலம்வந்து வணங்குபவரை தேவர்கள் வலம்வந்து வணங்குவர். 6. அன்னியூர் இத்தலத்துப் பெருமான் அரவம் (பாம்பை) ஆட்டின வர்; அவரைத் தேவர்கள் விரும்பி வந்து வணங்குவர். தங்கள் வினைபோக வேண்டித் தொழுபவர்களின் அன்ப ராய் கிற்கின்ருர் பெருமானர். 7. 'ஆக்கூர் இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தி. தான் தோன்றி அப்பர் ' என விளங்குவர். 8. ஆமாத்துர் இத்தலத்தில் தாமரை மலர்மீது வண்டு யாழ் வாசிக் கும். இத் தலத்துப் பெருமான் ‘அழகியர்”. ஆமாத் தார் அரனே என்று அவரை அழைத்தால் சிக்கிப்புள்ள மாம்பழம்போல அவர் இனிப்பர்; இராமர் பூசித்த மூர்த்தி இவர். இப்பெருமானைச் சிந்தை செய்யாதவர்கள் தீவினே யாளர்கள் உள்ளம் நொந்தவர்களின் ஐயப்பாடுகளே ஆமாத்துார்ப் பெருமான் தீர்ப்பார்; அவரை நினைத்தவுடனே உள்ளத்தில் உள்ள வஞ்சனை எண்ணங்கள் வற்றி மறையும்; பத்தி வெள்ளம் பரந்து பாயும். 9. திரு-ஆரூர் இத் தலம் கரும்பும், புன்னே மரங்களும் நெருங்கிய சோலையைக் கொண்ட ஊர். இத் தலத்தில் உள்ள கமலா