பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122. கலங்களைப்பற்றிய குறிப்புக்கள் 15] லயம் என்னும் திருக்குளம், பூங்கோயில் எனப்படும் ஆலயம், செங்கழுநீர் ஒடை இவை ஒவ்வொன்றும் ஐந்து வேலி அளவினது ; ஆதலால் அஞ்சணை வேலி ஆரூர் . என்ருர் அப்பர். . அழகிய வயல்களும், குளிர்ந்த பொழில் களும் சூழ்ந்துள்ள கலம் இது. ஆண் நண்டின் வரவைக் கண்டு பெண் கண்டு மகிழும் கழனிகளையும், பெரிய செங் நெல், பிரம்புரி, கெந்தசாலி, கிப்பியம் எனப்படும் நெல் வகைகள் வளரும் கழனிகளையும், ஆம்பல் மலரும் பொய்கை களையும், இருண்ட சோலைகளையும், குயில் கூவ மயில் ஆலும் மலர்ச் சோலைகளையும், தென்றலின் மணம் கமழும் இனிய, புகழத் தக்க மலர்ச்சோலைகளையும், பொழில்களையும், செந்தாமரை மலர்கின்ற நீர் நிறைந்த வயல்களையும், இருல், மலங்கு, வாளை, கயல், சேல், வரால், களிறு எனப்படும் பல வகைய மீன்கள் அடைந்துள்ள வயல்களையும், கெங்கு, கமுகு, வாழை, மா, மாதுளம் இவைகளின் தீங்கனி சிதறும் சோலைகளையும் கொண்டு விள்ங்கும் கலம் திருவாரூர். கனக மதில்களும், நிலவைத் தீண்டும் கொடிகள் விளங்கும் மாடமாளிகைகளும் விளங்கும் செல்வ மல்கியது கிருவாரூர். திருவிழாக்கள் பொலியும் நகர் அது. பறை, கல்லவடம் முதலிய வாத்தியங்களின் பரந்த ஒலிகளைக் கேட்டு மயில்கள் மேக ஒலி என எண்ணி மகிழும் தலம் கிருவாரூர். இது கேவர்கள் போற்றும் தலம். தேவலோகத்தை ஆள்வதை விட்டுத் திருவாரூரை ஆள விரும்பிவந்த பெருமான் (கியாகராச மூர்த்தி). அரம்பையர், கிருவருள் பெற்றுப் பரமனைக் கொழும் அடியார்கள், உருத்திர கனத்தவர், விரிசடை விரதிகள், அந்தனர், சைவர், பாசுபகர், கபாலிகள் ஆகிய பண்பினர் தெருக்களிற் பொலியும் திருநகர் திருவாரூர். ஆடவல்ல மூர்க்கி (தியாகராசப்பெருமான்). இத்தலத்தில் திருவாதிரைத் திருநாள் விழாமிகச் சிறப்புடன் திகழும்; பங்குனி உக்கிரத் திருவிழாவும் இக்கலத்திற் சிறப்புடன் நடைபெறும். இறைவனுக்கு உகந்த இருப்பிடம் இத்தலம். மூலவர் புற்றிடங்கொண்ட புனித மூர்த்தி. இக் கலக்கில்