பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) தலம். அட்டமி முன் ஏழு நாளும் இறைவன் (நடராசர்) கூத்தராய் (நடன மூர்த்தியாய்) வீதி உலா வரும் கலம். 60. கொட்டையூர் குராமாப் பொழிலை உடைய அழ்கிய தலம். குலைகளைக் கொண்ட தென்னஞ் சோலை சூழ்ந்த தலம். குவளைகள் மலரும் தலம். கொக்குகள் அமரும் வயல்களை உடைய தலம். மேகம் தவழும் கொடியாடு நெடுமாடிங்களை உடைய கலம். இக் கலத்துக் கோயில் கோடீச்சுரம் எனப்படும். நற்குணமுடைய நல்ல அடியார்கள் வாழும் தலம். நான்மறை, ஆறங்கம் இவைகளைக் கொண்டாடும் வேதியர் கள் வாழும் தலம். கிருமாலும் நான்முகனும் அருள் பெற்ற தலம். முனிவர்கள் இறைவனே மருந்து எனப் பாராட்டித் தொழும் தலம். 61. கொண்டிச்சுரம் (பழக்) குலைகளும், தேன் கிறைந்த (மலர்களும்) கிறைந்த பொழில்கள், குயில்கள் கிறைந்த பொழில்கள், மணம் வீசும் பொழில்கள், சேல்மீன் பாயும் வயல்கள், நீர் கிறைந்த வயல்கள், உயர்ந்த மாடங்கள்-இவை விளங் கும் பதி-கொண்டீச்சுரம். இங்கு மாதர்கள் இறைவனே வழிபடுவார்கள். கொண்டீச்சுரத்துப் பெருமான நினைப் பவர்களுக்கு ஊனம் ஒன்றும் வராது. பெருமானைத் தொழுது வணங்குவதால், தவம் கூடும், நல்லன வரும், பெருமை சேரும், பரலோகம் கிட்டும், வினை மாயும். 62. கொள்ளம்பூதூர் தங்கும் இடம். அறியாது, கொள்ளம்பூதுாரில் இறைவர் பலநாள் இருப்பர். 63. கொள்ளிக்காடு நீர் கிறைந்த கலம்.