பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) 103. பரங்குன்றம் | நல்ல பண் பாட வல்லவர்களின் பாடலும் ஆடலும் நீங்காக கலம் திருப்பரங்குன்றம். f 104. பராய்த்துறை களி வண்டுகள் பண்பாடும் கலம். மணற்குன்றின் மேல் விழுந்த மழைத் துளிகள் பாய்ந்திழியும் தலம். இறைவன் உகந்து வீற்றிருக்கும் கலம். அவரை வணங்கித் தொழுகல் (நன்மை பயக்கும்), இது வாய்மை. பாய்த் துறைப் பெருமானுடைய சேவடியை அடைந்து போற்ற, வினை உள்ளன அழிந்துபோம்-அற்று ஒழி 105. பரிதிநியமம் பன்னிருநாள் பரிதிநியமத்திற் பெருமான் தங்கினர் என்பர் அப்பர். 106. பருப்பதம் வடக்கே உள்ள தலம் ; இருண்ட பொழிற் சாரலில் விளங்கும் கலம். பல ஊழிக் காலமாய் இக் கலத்தே இறைவர் வீற்றிருக்கின்ருர் ; கடல் கடைந்த மந்திரமலை போன்றது கிருப்பருப்பதம் (பூரீசைலம்). இத் கலத்தையும் இத் தலத்தைப் பரவித் தொழும் தொண்டர்களையும் இறைவர் விரும்புகின்ருர். 107. பழனம் அழகிய ஊர். பொழில் சூழ்ந்த ஊர் ; காவிரி ஆற்றங் கரைத் தலம். அன்னங்கள் கிறைந்து ஒலி செய்யும் கலம்; வண்டுகள் பண்ணுடன் ஒலிக்கும் பொழில்கள் சூழ்ந்த தலம். பருத்த வரால் மீன் பாயும் வயல் சூழ்ந்த கலம். மாமரங்கள் நிறைந்த தலம். பலரும் பயின்று பாடும் தலம். பாட்டொலி நீங்காத் கலம். பழனத்தானுடைய ஆயிரம் நாமங்களையும் எண்ணித் தியானியுங்கள். அந்தப்