பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) ‘113. பாசூர், அக்சிக்கோன் (சந்திரனுக்கு) அருள்பாலித்தவர் பாசூர்ப் பவளமன்ன பாமனர். அவர் நீண்டதும் தீயது மான பட அரவைப் பிடித்தாட்டினவர்; பலரும் பயின்று தாழும் பதி பாசூர். பொழுகின் ஒரு பாகமெல்லாம் பாசூரிற் பெருமான் தங்குவார். மண்ணுேரும் விண் னேரும் அவரைத் தொழுது போற்றுவார்கள் 114. பாண்டிக்கொடுமுடி இத்தலம் கொங்கு நாட்டைச் சேர்ந்தது. தேவர்கள் இருக்கு வேதம் சொல்லிப் பணிந்தேக்கிய பதி இது. இது இறைவனுக்கு உகந்த ஊர். கிருக்கொடுமுடி என்று சொன்னவுடனே வினை அடியோடு கெட்டொழியும். இது கைகண்ட (பிரத்தியகமான) உண்மை. கொடுமுடிக் கூத்தப்பிரானைத் தொழ நம் வினை நாசமாம். 115. பாதிரிப்புலியூர் இத் தலத்துப்பெருமான் தோன்ருத் துணைவர்.” தேசமெல்லாம் இறைஞ்சும் கலம் திருப்பாதிரிப்புலியூர். இத்தலத்து அந்தணர்கள் பிரமனே போல்வர். பண் நிறைந்து அமைந்த பொருள்கள் (இசைக் கருவிகள், இசைப் பாடல்கள் பலவகையனவும்) பயிலும் தலம் பாதிரிப்புலியூர். சூரியனது ஒளியையும் சந்திரனது தண்மையையும் கொண்டவர் வாழும் பதி இது. திருப் பாதிரிப்புலியூர்ப் பெருமானுடைய அடியார்களின் வழி வழி அடியார்களுக்குக் கிடைக்கமாட்டாக அரிய பொருள் ஏதேனும் உண்டோ (ஒன்றும் இல்லை என்றபடி). 116. பாம்புரம் இறைவன் காதலிக்கும் தலம் பாம்புரம். 117. பாலைத்துறை மல்லிகை, சண்பகம் இவற்றின் புதிய பூக்களை அடித் துக்கொண்டுவரும் நீரையுடைய காவிரிக் கரைத்தலம்