பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) ல்ை நம்மீது சீறிவரும்(வினை முதலாயின) அற்றுப்போம். புள்ளிருக்கு வேளுர் என்று கூறினலே இடர்கள் வாரா. அத்தலத்தை விருப்புடன் கொழுபவர்களின் வினை அழியும். அத்தலத்தை நினைந்து உருகி நைபவர்களின் உள்ளம் குளிர்ந்திருக்கும். அத்தலமீது பற்றுவைப்பவர் களின் பாவம் ஒடிப்போம். அத் தலத்துப் பெருமானை வாழ்த்த இன்பம் பெருகும். 121. புறம்பயம் புறம்பயத்தைத் தமது ஊர் என்பர் இறைவர். புறம் பயத்தில் இறைவன் அறம் புரிந்ததாக வரலாறு. 122. புன்கூர் வயல்களில் கயல்மீன்பாயும். தாமரை கிரம்ப மலரும். கிழல்கரும் சோலைகள், பொழில்கள் உண்டு. இறைவர் 'சிவலோகநாதர்” எனப்படுவர். 123. புனவாயில் கடற்கரைக்கு அருகில் உள்ள கலம். பற்று அற்ற பெரியோர் சேரும் பழம்பதி. 124. பூந்துருத்தி மலர்நிறை பொழிலை உடைய தலம். நீர் கிறைந்த செல்வத்தை உடைய கலம். இறைவர் ‘ பூந்துருத்திப் பொய்யிலி' எனப்படுவர். அறச்செயல்கள் நடைபெறும் தலம். பூந்துருக்கி, பூத்துருத்தி என்று ஜெபித்தால் பொல்லாத இந்தப் புலால் துருத்தியாகிய உடல் இனி வாாாது-பிறப்பு அறும் என்றபடி. 125. பூவணம் பொழில் விளங்கும் கலம்.