பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) 139. மீயச்சூர்-மியச்சூர் இளங்கோயில் மீயச்சூரில் பழையகோயில், புதியகோயில், வேறு கோயில்கள் இருந்தன. இறைவனுக்கு இளங்கோயிலே (புதிய கோயில்) மிக உயர்ந்தது ; அக்கோயிலை விட்டு நீங்கா கிருந்தார் இறைவர் கேவியுடன் : (பழைய கோயி அக்குப் பழுது பார்த்திருந்த காலம் அப்பர் சுவாமிகள் மீயச்சூருக்குச் சென்ற காலம். சுவாமி பாலாலயத்தில் (இளங்கோயிலில்) பூசிக்கப்பட்டு வந்தார். ஆதலால், 'மீயச்சூர் இடைகொண்டேக்க கின்ருர்’ என்ருர் அப்பர்.) மக்களுடைய துன்பக்தைத் தீர்க்க, குற்றங்களே நீக்க, இறைவர்-இளங்கோயிலில் இடங்கொண்டுள்ளார். 140. முண்டிச்சுரம் தென்பெண்ணே நதி இரு கரையும் பரந்து பெருகும் தலம். சிவபெருமான் சிவ்லோகன்' எனப்படுவார். 141. முதுகுன்றம் (விருத்தாசலம்) இது இறைவனுடைய பழைய ஊர். 142. முருகன் பூண்டி இது முல்லை நிலத்துக் (காட்டகத்துத்) கலம். 143. மூக்கீச்சுரம் (உறையூர்) திரிசிராப்பள்ளிக்கு அருகில் உள்ள தலம். 144. வலஞ்சுழி காவிரிக்கரைத் தலம் மயில்கள் ஆடிக் கூவும் பதி. மலங்கு மீன்வகை பாயும் வயல் சூழ்ந்த பதி. மாமரம் ஆகிய மரங்களைக்கொண்ட சோலையை உடைய பதி வண்டு பண் முரலும் பதி. வண்டலொடு மணலைக் கொண்டுவரும் (பொன்னி) காவிரி நீரைக்கொண்ட பதி. மாடவீதிகள் உள்ள பகி, தேவர்களும் முகிவர்களும் உமையும் பூசிக்க பதி. திருவலஞ்சுழியை வலம் வந்து வணங்கினவர்களின்