பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) (22) பனி நீராற் பாவை செயப் பாவித்தேன். (23) பாம்பின்வாய்த் தேரைபோல (24) [.. பழுக்கே நீரிறைத்து. (25) பாழுரிற் பயிக்கம் (பிச்சை)புக் கெய்த்தவாறே. (26) மத்துறு கயிரே போல மறுகுமென் உள்ளம் (27) மன்றத்துப் புன்னே போல ம.ம்படு தயாம் எய்தி. H (28) முயல்விட்டுக் காக்கைப் பின் போனவாறே. (29) மோத்தையைக் கண்ட காக்கை போல. (80) விளக்கத்திற் கோழி போன்றேன். (31) விளக்கிருக்க மின் மினித் தீக் காய்ந்தவாறே. 148. நெஞ்சம்-மனம்-அதன் குணம் (140) நெஞ்சம் ஊசல்போல ஒன்று விட்டு ஒன்றைப் பற்றும். ஐம்புலன்களின் சேட்டையால் மத்துறு கயிர் போல நெஞ்சம் மறுகும். ஐம்புலன்கள் வேண்டும் பொருள் களேயே கெஞ்சமும் வேண்டுகின்றது. தக்கதல்லாத நெறி யிலேயே மனம் திகைக்கு நிற்கின்றது. இறைவனே கினே க் கும் நெஞ்சமே ! உன்னே நான் விரும்புகின்றேன். உள்ளத் தைப் பொற்பீடமாக்கி இறைவனே ஆங்கு இருத்தித் தியானிக்க நமது வினை நாசமாம் ; இறைவன் திருவருளால் கள்ள நினைவுகள் ஒழிய, மனம் ஒன்றுபட்டு இறை ஒளி உள்ளத்தே விளங்கும். நெஞ்சத்தை அறிவிலா நெஞ்சு. இழுதை நெஞ்சு, ஏழை நெஞ்சு, நன்னெஞ்சு, கிலையிலா நெஞ்சு, பாவி நெஞ்சு, பேதை நெஞ்சு, மடநெஞ்சு, வன்னெஞ்சு-என்றெல்லாம் கூறியுள்ளார் அப்பர்.