பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. அப்பரைப்பற்றிய விவரங்கள் 11 (3) நோய் தீரப்பெற்றுக் கூறினவை (7 (8) ) பெருமானே! சூலை நோயைத் தீர்த்து அடியேனே ஆட் கொண்டீர். இப்பொல்லா நோயைத் தீர்க்க பெருமானே ! உன்னை நான் மறந்து உய்வேனே! என்னைத் தண்டித்த நோயை நீக்கின உன் போருளை வியக்கின்றேன்; உன் பணியிற் பிழைசெய்தால் புளியம் வளாரால் மோதுவிப்பாய் என உணர்ந்தேன். என் பிழைகள் யாவற்றையும் பொறுக் தனேயே என் பிணியை ஒழித்த மருந்து நீ; என்னேச் சோதித்த புனிதன் நீ அறிவிலியாய் உன்னே மறந்திருந்த என்னை மடக்கி ஆட்கொண்டாய்; நானும் உனக்கு ஆளாகி விட்டேன். (4) சமணிற்பட்டு அலைச்சலுற்ற விவரம் (7 (2)) அமணர்களுடைய சொல்தான் திடமானதென்று கொண்டேன்; துன்பத்துக்கும் குற்றத்துக்கும் ஆளானேன்; எண்ணிலாத சமணர்களொடு சேர்ந்து காலம் போக்கினேன்; குருடனுக்கு ஊமை வழிகாட்டிச் செல்லும் வழியில் என்னை வஞ்சனை செய்து மாட்டி வைத்தாய் ; கையில் உண்டு, பெண்கள் முன்னிலையில் அமனே கிற்கும் சமணர் தம் சொற்கேட்டு, உணர்விலாது கிரிந்தேன். கறியுடன் நெய் சோறு உண்டு பொல்லாத காட்சிக்கு இடம் தந்தேன் இங்ஙனம் பலகாலம் வீணுக்கி விட்டேன். (5) சமண் தீர்ந்ததும் இறைவனது திருவருளைப் பெற்றதும் (7 (4)) அமணரை விட்டேன், உய்யும் வழி கண்டேன், உய்க் தேன்; எம்பெருமான் எண்ணிலாச் சமணரினின் அம் எனப் பிரித்து ஆட்கொண்டார். சமணர்களுடைய வார்த்தையை மெய்யென்று எண்ணி, அவர்களுடைய மயக்கில் வீழ்ந்து அழுந்தின என்னே, அவர்களினின் றும் விலக்கி, ஆளாகக் கொண்டு, என் பிறவிப் பிணியைத் தீர்த்து அருள் புரிந்தார் பெருமானர். சமணர் கிறம்பட்ட என்னை, அத்திறம் ஒழியும்படி செய்து கயாமூல கன்ம