பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 தேவார ஒளிதெறிக் கட்டுரை (அப்பர்) 5. அடுக்குச் சொற்கள் (6) 'அஞ்சல் அஞ்சல், ஊறி ஊறி, ஒடஒட, தோன் அறும் தோன்றும், வேறுவேறு' முதலிய 78 அடுக்குச் சொற்கள் ஒளிநெறியில்’ எடுத்துக் காட்டப்பட்டுள. 6. (1) அப்பர் தமது பழைய நிலையைப் பற்றிக் கூறுவது (7 (1) ) முதலில் நான் கமிழோ டிசை பாடுகலை மறந்ததில்லை; சலம், பூவொடு துாபம் மறந்ததில்லை. நன்மை தீமைகள் வந்த போதிலும், சிவனே ! உன்னை நான் மறங்கதில்லை. பின்னர், என் வினைவசத்தால் சமணர் கம் பேச்சைக் கேட்டு, சிவனே ! உனது திருவடிகளை மறந்தும் கினையாத மதியிலி ஆனேன். இப் பிறப்பை வீனக்குபவர்களின் பேச்சைக் கேட்டேன் ; அதிகைப் பெருமானுடைய கிரு வடிகளை அணைந்து வாழாது ஏழையேன் இகழ்ந்திருந்தேன்; அறிவிலியாய் என் வாழ்நாளில் நெடுங்காலம் வீனக்கினேன். என் இளமைப் பொழுதெல்லாம் இங்ானம் வீனகத் தொலைந்தது. முதலில் எம்பெருமான் என்னேச் சற்றும் அறியாது இருந்தார்-நானும் அவரைச் சற்றும் அறியா திருந்தேன் ; பின்னர் எம்பெருமான் என்னே இவன் நம் அடிமை என அறிந்தார் ; நானும் அவரை நம் பிரான் என்று அறிந்தேன் ; இப்போது எம் பிரானுடைய திருநாமங்களைப் பி கற்றி அவரது திருவருளைப் பெரிதும் பெற்றேன். இனி அவரை விடேன். - (2) சூலைநோயிற் பட்டபோது கூறினவை (7 (3) ) பெருமானே இச் சூலைநோய் கூற் றுவன்போல என் உள் துழைந்து குடரைப் புரட்டுகின்றது, வலிக்கின்றது, சுடுகின்றது, வயிற்றைக் கலக்கி மலக்குகின்றது, விஷம் போல வேதனை தருகின்றது, வேர்க்கின்றது, நோய் காளாது புரண்டு, விழுந்து எழுகின்றேன. அடியார்கள் இங்கனம் நோயிற்பட்டால் எம்போலியர் உன் பெருமையை எங்கனம் உணர்வார்கள் ! I f