பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) வருகின்ருர் மாதவர்களின் அன்புக்கு உறைவிடம் பெருமானர் ; மாதவர்தம் நாயகன் அவர், மருந்து அவர் ; முகிவர்கள் தம்மைச் சூழ முற்றம் தோறும் வீணே வாசித் துக் கொண்டு செல்வார் அவர். ஞாயிறு (சூரியனது) வெம் மையைப் பொறுக்கின்ற முகிவர்கள் விரும்பிப் போற்றும் நல்லவர் பெருமான். குசை (கருப்பை), கோசம் (புத்தகம்) காத்திற் கொண்ட மங்கல வாசகர் பெருமானே வாழ்த்துகின்ருர். H. முனிவர்களுள்-அகத்தியர், உபமன்யு, தாருகாவன முகிவர்கள், சப்த ரிஷிகள், பிருங்கி இருடி, மார்க்கண்டேயர் சொல்லப்பட்டுள்ளார்கள். 174. முருகவேள் (169) முருகவேள் சிவனரின் கிருமகனர்; முருகவேள் சரவணக்கில் தோன்றியவர் ; அவருக்குக் கிருமுகங்கள் ஆறு கண் பன்னிரண்டு ; அவர் படை வேல் , அவர் கொடி கோழி ; அவர் வாகனம் மயில்; அவர் செந்துாரில் வீற்றிருப்பவர்; சிவபிரானப் போற்றிசைப்பவர்; போருக்கு வந்த சூாபன்மாவைக் கடலில் அட்டவர்; குறத்தி வள்ளியை மணந்தவர்; அப்பர் பெருமானுக்குக் காட்சியளித்தவர் ; அப்பர் பெருமானல் நங்கடம்பன், நஞ்செந்தின் மேய வள்ளி மணுளன், செல்வக் குமரவேள் என மகிழ்ந்து கூறப் பட்டவர். வள்ளி மணுளன், வேலன், அறுமுகன், கடம்பன், குமரன், கோழிக்கொடியோன், சாவணத்தான், மயிலுர்தி, முருகவேள், வள்ளி மனளன், வேலன்என்னும் திருநாமங்களால் முருகவேள் கூறப்பட்டுள்ளார். 175. பாக்கை-வாழ்க்கை-பிறப்பு- இறப்பு [170] 1. யாக்கை வர்ணனை (170 (1) ஐம்பூதங்களால் ஆக்கப்பட்டது ஆக்கை. உயிர் பிரிக் கால் இவ்வுடலை ஊரார் வெறுப்பர். இவ் வுடலுக்கு ஊன்