பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192. வேதமும் மறையும் 255 7. மன்றயும் சிவனும் (188-7) () பெருமானே நான்மறைகளும் ஆறு அங்கமும் ஆனவர். கேவர்களும் காணுத மறையைப் பெருமான் வைத்துள்ளார். பெருமானுடைய மொழியெல்லாம் துாய மறைமொழி. கான்கு மறைகளுக்கும் இறைவர் அவரே. மறைவல்லவர் அவர் ; நான்மறைகளும் காண இயலாத தன்மையர் பெருமான் என்றுணர்ந்து தேவர்கள் அவரை ஏத்தி வணங்குவார் கள். நான் மறைகளையும் ஆறங்கங் களை யும் விரித்துக் கூறினவர் அவரே. மறை ஒசை வயலெலாம் கேட்கும். மறை ஒதித் தம்மை கினேப்பவர் உள்ளத்தில் பெருமான் உறைவார். முத்தமிழும் நான்மறையும் அவரே. 8. சிவபிரான் மறைபாடுவது, ஒதுவது முதலிய (188-8) பெருமான் மறை ஒதும் நாவர். அழகிய நான்கு மறை களேயும் அவர் பாடினர் ; மறை நான் கையும் அங்கம் ஆறினேயும் ஆய்ந்தார் அவர் ; ஒதினர் அவர் ; நான்மறை யுடன் பலவகையான கீதங்களையும் பாடினர் அவர். மறை பாடலோடு ஆடலும் செய்வர். மறைபாடிப் பிச்சைக்கு என்று வீடுகள் தோறும் கிரிந்து வாழ்வார். மறையுடனே சிறந்த கீதங்களைக் கேட்டவர் அவர் ; மறைகளைத் தமது வாக்கால் விரித்த உரைக் கவர் அவர் ; நான்கு மறைகளை யும் அங்கம் ஆறினேயும் விரித்தவர் அவர். 9. மறைப்பொருள் சிவன் (188-9) து.ாய மறையின் பொருளாவார் பெருமான். மறைகள் சொன்ன ஒவ்வொரு துறையின் தூய பொருள் அவரே. மக்கிரமும் அவர், மறைப்பொருளும் அவர். நான் மறையின் கற்பொருள் அவர். 10. வேதமும் மறையும் (188-10) மறையுடைய வேதத்தை விரித்தவர் பெருமான். அவரே வேதமும் மறையுமாய் விளங்குகின் ருர்.