பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) - (7 - வன் நான் ; பேய்க்கும் கோட்டானுக்கும்தான் நான் இணை யாவேன்; பொதுவெளியில் உள்ள புன்னே மாம் படுத்துயரம் படுகின்றேன் ; முற்பிறப்பிலும் ஒரு தவம் செய்திலேன் போலும்! மெய்யனுய் வாழ்கின்றேன் இல்லை. வஞ்சம் என் கின்ற பெண்ணைத்தான் மணந்துள்ளேன் ; மெய் என்னும் விளக்கை ஏற்றவோ, தூண்டவோ முடியாமற்போம்படி என்னுள்ளே ஐவரை இறைவன் வைத்துள்ளான் ! அங்க ஐவரே வலியர் ; அதனல் இன்னது செய்வதென்று அறிய முடியாது இளைக்கின்றேன் ; வினை எனப்படும் சரக்கு வியாபாரம்தான் செய்கின்றேன் ; வெறுப்புப் பேச்சுக்தான் கிரம்பப் பேசத் தெரியும்; நாளும் நாளும் வேதனைக்கே இடம் கொடுத்துத் தவிக்கின்றேன். 2. அப்பர் தம்மை நிந்திக்கும் சொற்கள் (7 (7) ) ஆதன் (அறிவிலி), இழுதையேன், கள்ளக்கேன், செடியனேன், நீசனேன், பாவியேன், பித்தனேன், பேதை யேன், பேயேன், பொல்லேன், பொறியிலேன், மதியிலேன், வஞ்சனேன், வல்வினையேன். 8. (1) அப்பர் இறைவனிடம் வேண்டும் வேண்டுகோள்கள் (7 (8)) அடியேனேக் குறிக்கொள் என்றே பதிகம் பாடி உள்ளார் (95,126); அடியார் பொருட்டு ஒரு விண்ணப்பப் பதிகமும் (110) பாடியுள்ளார். வேண்டுகோள்கள் 1. அடியேன் இனிப் பிறவாகவாறு அருள்புரிக. 2. பிணி நோய்களை ஒழித்தருள்க. 3. இடபம் பொறித்து என்னே என்றுகொள். 4. இறைவா! உன்னை கினைந்தே என் ஆவி போம்; ஆவி கழிந்தபின் என்னை மறந்துவிடாதே. 5. என் பாசங்களை அறுத்து என்னே ஆண்டுகொண் டருள்க. 6. வழிவழி யாளாகும் வண்ணம் எனக்கு அருளுக.