பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) வல்லீராகில் உங்கள் துயர் தீரும்; நல்லம், நல்லம் எனக் சொல்ல வல்லவர் தூய நெறியைச் சேர்வார்கள்; பொய் பேசிக் காலத்தைக் கழிக்காதீர்கள்; துக்கம் தீரும் வழியைக் கூறுவேன் ; கேளுங்கள், கிருநல்லம் என்னும் கலத்தைச் சேருகல் உங்களுக்கு நன்மை கரும்; வினைக் கடல் வற்றி நீங்கும், சிவகதி கூடும்; நல்லூர்ப் பெருமானத் தியானி யுங்கள் ; நின்றியூரை அன்புடன் கொழுதாலும், உரைத்துத் கொழுதாலும், வினே ஒயும். ஆவி நீங்குமுன் நீலக்குடி அானுர் சேவடியைக் கைகொழுது உய்மின் ஆள் ; ஏனெனில் உயிர் போம்போது கொழவேண்டும் என்னும் கினேவு கூடுதலளிது. மாய மனே வாழ்க்கையை கினைந்து வாழ்கின்றீர் களே! நெய்த்தானம், நெய்த்தானம் என்று சொல்வீர் களாகில், புலால் தானமாகிய இப் பிறவியை நீங்கள் நீக்க முடியும்; பழனம், பழனம் என்று சொல்வீர்களாகில் உங்கள் பழவினே நோய் அற்று ஒழியும்; நல்ல மலர் கொண்டு மாலைகள் புனேந்து பராய்த்துறை காகனே-எங்கள் வேதனை யைத் தீர்த்தருளுக என்று கூறிப் பணிந்து உய்வீர்களாக, திருப்புகலுரைத் தொழுவீர்களாக விருப்புடன் மாதருடன் வாழும் வாழ்க்கையை வெறுத்து, இட்டத்துடன் திருப்புத்துர்ப் பெருமான நீங்கள் சிந்திக்கச் சிந்திக்க அவர் கரும்புச் சாற்றைவிட அதிகமாகத் திக்கிப்பார். இறப்பகன் முன் - கிருப்புள்ளிருக்குவேளுர் நீலகண்ட்ஆன வாழததுங்கள. தண்டு ஊன்றி மெய்களர்வதன் முன்பே பூந்துருத்தி, பூந்துருத்தி என்று நீங்கள் சொல்வீர்களாகில் பொல்லாத புலால் தருத்தியான பிறவியை நீங்கள் ஒழிக்கக்கூடும்; பூவனூர் ஈசனே வாழ்த்துங்கள் ; உங்கள் தீவினையை ஒழிக்கக் கூடும். கிருப்பைஞ்ஞீலி அமுகனை அடைந்து உய்மின்கள் ; கிருமணஞ்சேரி ஈசன் தன்மையை வாழ்த்துங் கள்; மருகற் பெருமானது திருவேடத்தைக் கைதொழுதால் வீடு எளிதாகும். திருமாற்பேற்றிசர் நோய், பிணியை நீக்கவல்ல மருந்தாவார்; சாத்திரம் பேசிப் பயனில்லை, கோத் திரம் குலம் சிறந்தன என்று பெருமை பேசிப் பயனில்லை.