பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 தேவார ஒளிநெறிக் கட்டுர்ை (அப்பர்) 62. சமனும் சிவனும் (50-11) சமணர்களால் அறிய முடியாதவராய் கின்ருர் சிவர்ை. ஆயிரக் கணக்கில் அவர்களுக்குக் கேடு-அழிவு-விளைவித்தார்; அவர்கள் குலத்த வேரை அறுத்தார். சமணருடைய சொற்களைக் கேளாத குணத்தினரிடம் சிவனர் மகிழ்வார். 63. சமயமும் சிவனும், (51) அருக்கனே (சூரியனே) வணங்குவார்கள். அருக்கன் அரனுடைய உருவங்கானே : எரி வளர்த்து வணங்குவர் ; எரியும் ஈசனது உருவமே. ஆறுவகையான சமயங்களை வைத்தவர் ஈசனே ; அச்சமயங்களுக்குப் பொருளாவாரும் அவரே; அறுவகைச் சமயக் கார்களுக்கும் கே அகல் தருவன ஈசன் கிருவடிகாே. $4. சிவபிரான்-அட் டமூர்த்தி | 52] நிலம், தீ, நீர், காற் று, ஆகாசம், திங்கள், ஞாயிறு, இயமானன் (ஆன்மா - உயிர்) என்னும் எட்டுமாய் சிற்பவர் இறைவர்; ஆதலால் அவர் அட்டமூர்க்கி, எட்டு மூர்த்தியர் ' எனப்படுவார். 65. சிவபிரான் - அட்ட வீரச்செயல் (58) (1) அந்தகாசுரனைச் சங்கரித்தது (53 (1) ) உயிர்களை வருக்கிய அந்தகாசு.ானது உடல் சுருண்டு (வேதனைப்பட), சிவபிரான் அவனேத் தமது கூரிய குலத் தில் அழுத்திக் கோத்துக் கொன்ருர். (2) காமனை எரித்தது (58 (2) ) சிவபிரானுக்குக் காமம் ஊட்டக் கருதிக் காமன் தன் ஐந்து மலர்க் கணைகளை அவர் மீது கள்ளத்தனமாய்