பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65. சிவபிரான் - அட்ட வீரச் செயல் 65 எய்தான். அப்பேர்து இளவேனிற்காலம். அவர் அழல் விசும் தமது நெற்றிக் கண்ணுல் அவனைக் கோபித்துப் பார்த்துப் புன்னகை புரிந்தார். அந்த நெற்றிக் கண்ணி னின்றும் தி படர்ந்து சென்றது. காமன், அவனது அழ கெல்லாம் தொலைந்தொழிய, ஒரு நொடிப்பொழுதில் வெந்து பொடியாய் விழுந்தான். தேவகணங்கள் அங்கத் தீயைக் கண்டு பயந்து வணங்கி அகன்றன. உலக மாதாவாகிய தேவி மகிழ்ந்தனள். காமன் மனைவி ரதிதேவி அச்ச முற்றனள், அவளுக்கு இரங்கி இறைவன் அன்புகூர்ந்தார். இறைவா! இங்கனம் காமனேக் கண் அழலால் விழித்த நாளோ 母 திருவாரூர் கோயிலாக்கொண்ட நாள் என்கின்ருர் அப்பர். இதல்ை ஆரூர்த் திருக்கோயிலின் பழமை புலப்படுகின்றது. காமன் மிக்க அழகுடையவன், சுரு:மீன் கொடி கொண்டவன், கென்றலைத் தேராக உடையவன், கரும்பு வில் ஏந்தியவன், ஐந்து மலர்ப் பானங்களை உடையவன், களவுத் தொழில் பூண்டவன், பொல்லாதவன், கிருமாலின் மைந்தன், இளவேனிலையும் பிறையையும் விரும்புபவன், வில் வல்லவன். அனங்கன், காமவேள், மதன், மதனன், மகனவேள், வேன லான், வேனில்வேள், வேனிலான் என்பன காமனே க் குறிக்கின்றன. (3) காலனை உதைத்தது (53 (3) ) மார்க்கண்டருக்கு விதித்த நாள் முடிந்ததென்று தருமராசல்ை ஏவப்பட்ட காலன் அவரைப் பிடிக்க வங்கான் அவன் வந்தபோது மார்க்கண்டர் தாம் காலையிற். கொண்டு வந்த மலர்மாலை கொண்டு இறைவனே வழிபாடு செய்துகொண்டிருந்தார். கொதித்து எழுந்த சிந்தைய ஞய்ச், (சிவ சங்கிதி, சிவனடியான் என்று) கிதானித்து உணரும் அறிவு அற்றவனுய் வந்த காலன் பாலனம் அவர் ஒட ஒடப் பெரும் பயத்தை ஊட்டி, உயிர் வவ்வும் பாசத்தை அவர்மீது வீசினன். இங்ங்னம் நெருங்கிய காலனேக் கண்டு. தே. ஒ. க.-5