பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்). (6) சிவபிரான் திரிபுரம் எரித்தது (58 (6) ) 1. முப்புரங்கள்: இவை மூன்று பெரிய நகரங்கள். காவலோடு அமைக்கவை. மந்திர சக்தியால் ஆகாயத்திற் பறவை போலவும், கேர் போலவும் செல்ல வல்லவை. எங்கும் பயத்தையும் கேட்டையும் ஊட்டினவை. ஒரிடத் தில் கில்லாது எங்குக் கிரிந்து வானத்தையும் நிலத்தையும் நாசம் செய்தவை. 2. மும்மதில்கள் : புரங்களின் மதில்கள் வட்ட வடிவின ; அவை ஆகாயத்தை அடைக்கன : பெரியன ; பருத்தன ; செம்பினல் ஆயவை ; மலை போன்றவை; வியக்கத்தக்கவை ; படைகள் பொருங்கியவை ; கொடிகள் விளங்கியவை ; ஆயிரக்கணக்கான அசுரர்களுக்கு இடங் தநதவை. - 3. திரிபுராதிகள் : இவர்கள் இரங்கா வன்மனத் தவர்கள். யாவரையும் இகழ்ந்தார்கள் ; நல்லுணர்வு இல்லா தவர்கள் ; கடியர்கள், கொடியர்கள், கயவர்கள், இழித் தோர்கள், தியர்கள், எதற்கும் நடுங்காதவர்கள், இறைவனே கினை யாதவர்கள், போற்ருதவர்கள்; பொல்லாத நெறிகளில் மகிழ்ச்சி பூண்டவர்கள்; வானேர்க்குப் பகைவர்கள், தமது வல்லமையைப் பேசிக் கொடுமை செய்தவர்கள். 4. திரிபுரம் எரித்த வரலாறு : கிரிபுராதிகளின் கொடுமைக்கு ஆற்ருத தேவர்கள் ஒலமிட்டு மலர்து விச் சிவபிரானைத் தொழுதனர்கள். சிவபிரான் கிருமாலை ஏவித் திரிபுராதிகளை மயக்குவித்து அவர்கள் இறைவனே கினேயா வழிக்கு சோம்படி செய்வித்தனர். பின்னர், சிவபிரான் போர்க்கோலம் பூண்டனர். அவரது தேர் வைதிகத் தேர் ; தெய்வத் தேர் ; வானிற் செல்லவல்லது ; நான்மறைகளே குதிரைகளாகப் ஆட்டப் பட்டன ; அவரது வில் செம்பொன் மலையாம் மேருமலை ; (மந்தரமலை எனவும் கூறப்பட்டுளது). இறைவர் மேரு மலையை வட்ட மாக வில்லாக வளைத்தார். அவரது அம்பின்