பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66. சிவபிரான் - அணிவன, குடுவன 71. | துே கடுக்கத்தைக் கண்டு இறைவர் பற்கள் தெரியச் சிரித்த னர். சிறிதுபோதே தோலைத் தரித்திருந்தனர். அங்ானம் போர்த்த உடையுடன் கூத்தாடினர் பெருமான், இறைவன் யானேயை அட்டபோது கொண்ட கோலம் ‘விடலை வேடம்’, ' கால பயிரவ வேடம்” எனக் கூறப் பட்டுளது. கால பயிரவ வேடங்கொண்ட இறைவர் கிருக் கரத்தில் பல சூரியர்களின் ஒளியைக் கொண்ட சூலமும், பேரொலி செய்யும் கமருகமும் விளங்கின. - 66. சிவபிரான் அணிவன, சூடுவன (54) சிவபிரான் அணிந்துள்ளன : அக்குவடம் (ருத்ராக்க மாலை), ஆமை ஒடு, எலும்பு (கலைமாலை, வெண் டலை, ஒடு), கங்கணம், கங்கை, கடி சூக்திமம், கண்டிகை, கொக்கிறகு, சங்கக் கலன், சாங்கம், சாம்பல் (திருநீறு), சூளாமணி, திங்கள், தோல், பட்டம், பளிங்குவடம், பன்றியின் கொம்பு, பாம்பு, பிரமன் அங்கம், பூனூல், மயிர்க்கயிறு (பஞ்சவடி), மலர்கள், மால் அங்கம், மாலைகள், முத்துவடம், வயிரக்கோவை, வளை (நாகவளை), விடம். இவை தம்முள் : (1) ஆபரணமும் அணிகளும்: அாவாபரணம், எலும்பா பாணம், பன்றியின் எயிற்ருபரணம் ; கையில் - நாகவளை ; தலையில் தலைமாலை ; சடாமகுடத்தில் வெண்டலைமாலை, கொக்கிறகு, சூளாமணி ; கோளில் - கங்காளம் (எலும்புக் கூடு), கோள்வளை ; கழுத்தில்-பளிங்குவடம், முத்துவடம், வயிரக்கோவை; கண்டிகை (அக்குவடம், ஆரம்); பன்றியின் கொம்பு; ஆலகால விடம்; ஏகாசமாக (மேல் அங்கவஸ்திர மாக) பாம்பையே அணிவர் ; கலைமாலை கோப்பதற்குக் கயிறு பாம்பே ; மேனி எல்லாம் பசுஞ்சாங்தும் சாம்பலும்; கடிகுத்திரத்தின் மேல் கபால வடம் விளங்கும். (2) ஆமை ஒடு : அந்த ஆமை இளஆமை, பொறி களை உடையது ; பொன் ஒளியது ; அவரது பூணுால் மேல் விளங்கும். இறைவர் ஆமைபூண்ட அழகர்.