பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) திருக்காம் ; இங்கனம் இருக்கக் கிரிபுரத்தை எரித்தது என்ன பராக்கிரமச் செய்ல் என வியக்கின் ருர் அப்பர். (7) பிரமன் சிரத்தை அறுத்தது (58 (7) ) பிரமன் அறநெறியில் கில்லாமல், சொல்லத்தகாத சொல்லைச் சொன்ன காரணத்தால் அவனுடைய ஐந்து தலைகளுள்-நான்கு கலைகளுக்கு மேலே இருந்த கலையை - உருத்திரமூர்க்கி தமது கைங் நகமாகிய வாளில்ை, ஒரு மாத்திரை நேரத்தில், கிள்ளி அறுத்துக் கமது மறக் கருணையை உலகெலாம் காட்டி கின்ருர். அறுபட்ட தலையைத் தமது கையிலேந்தி அத் கிறையத் திருமாலின் . ரத்தத்தை கிரப்பினர். இங்க வீரச் செயல் உலகெலாம் அறிந்ததே. (8) யானையை அட்டது [58 (8) ) உரித்த யானை : அண்டத்தை அளாவும் பெரிய மலை போன்றது ; கருகிறத்தது ; இடி போன்ற முழக்கத்தைக் கொண்டது. அழகும், வலிமையும், மும்மதமும், கடுஞ் சினமும், பைங்கண்ணும் கொண்டது; கூரிய வெண்ணிறத்த மருப்பைக் கொண்டது ; பனே போன்ற துதிக்கையைக் கொண்டது. யானையை அட்டவிதம் : எதிர்த்து வந்த யானை அஞ்சிக் கதறிப் பிளிறிப் பதைக்க அதைப் பற்றிப் பிடித்து உதிர ஆறு ஒடும் வண்ணம் அதன் தோலை உரித்தார். குருதியாற் சிவந்து ஈரத்துடனிருந்த அங்கத் தோலைத் தமது உடல் மேலும் கீழும் தோன்ருவண்ணம் மூடும்படியும், கண்டவர் அஞ்சும்படியும், போர்த்துக் கொண்டார். தேவர்கள் இறைஞ்சி ஏத்த இங்கனம் அந்த யானையை உரித்துத் தோலைப் போர்த் துக் கொண்டார். தேவி பாகத்திருக்க யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டார். உரித்ததைக் கண்டும் போர்த்த தைக் கண்டும் தேவி அஞ்சி நடுங்கினள். தேவியின்