பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-அப்பர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 தேவார ஒளிநெறிக் கட்டுரை (அப்பர்) புரிந்தவருமான அழகியு அந்தணர் நால்வர்க்கு அறங்காட்டி வெவ்வேறு வேகங்களையும், மறைப்பொருளேயும், அங்கங் களையும், நெறிகளையும், அறம், பொருள், இன்பம், வீடு என்பவற்றையும் அழகாக விரித்துரைத்தார். அங்ங்னம் அவர் அறங்கள் பலவற்றையும் விசித்து உரைத்ததற்கு முன்னே பின்னே இறைவன் திருவாரூரைக் கோயிலாகக் கொண்ட நாள்-என வினவுகின்றனர் அப்பர் பெருமான். (இதல்ை திருவாரூர்க்கோயிலின் பழமை புலப்படுகின்றது.) 75. சிவபிரான் ےgy,5ooL ناہ ھی وہooLوب போர்வை (68) () உடை, ஆடை : கல்லாடை(காவித்துணி), கரியுரி ஆடை, தோலுடை, செம்பட்டாடை, பட்டு உத்தரியம், புலித்தோலாடை, புலித்தோல் ஏகாசம் (மேல் அங்க வஸ்திரம்) : புள்ளிமான் கோல் ஆடை : புலித்தோலை உடுத்து இறைவன் தேவியை நடுங்க வைத்தார். மடக்கிக் கட்டிய புலித்தோலின் மேல் கச்சாக முடக்கிக் கட்டிய நாகம் விளங்கும். (ii) கச்சு : வாசுகி என்னும் மாநாகம் அரைக் கச்சாகும். (i) ஏகாசம் : (மேல் போர்வை): புலிக்கோலும், ஐந்தலை அரவும் ஏகாசமாம். 76. சிவபிரான் இருவர்க்கு அரியராய் நீண்டதும், அழலுருவாய் நின்றதும் (64 (1) ) பிரமனும் மாலும் யானே தேவன்', 'யானே தேவன்' எனக் கூறித் தம்முளே மாறுபட்டு மலைந்தனர். அவர்கள் நடுக்கம் உறும்படி அவர்களின் முன்பு தீப்பிழம்பாய் - சோதிச் சுடாாய் - நீண்ட நெருப்புருவத்துடன் கின்றனர் |