பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

தேவார ஒளிநெறிக் கட்டுரை

81. தமிழ் [223-224]

தமிழ்மொழி எழுதுமொழி; தமிழ் தென் சொல், முத்தமிழ், அசைவிலாத் தமிழ். தமிழ் அருமை வாய்ந்தது, அழகு நிறைந்தது; இசை மலிந்தது; இன்பம் பயப்பது; இனிமை கொண்டது; கீதத்துக்கு ஏற்றது; குலவேந்தர் (சேரசோழ பாண்டியர்) போற்றியது; குற்றமில்லாதது; சங்கத்தார் ஆய்ந்தது; சந்தம் பொலிவது; சீர்பெற்றது; செந்நெறி கூட்டுவிப்பது; சொல் நிரம்பியது; தேன் ஒப்பது; நாடத் தக்கது ; பண் நிரம்பியது; பயன் பாலிப்பது; பல ஒசைக்கும் இடந்தருவது; பல கலைகளை உடையது; புகழ்மிக்கது; பொருள் ஊறுவது; பெருகுந் தன்மையது; மறைவளர்வது; முடிவிலாதது.

அடியார்கள் நரப்புக் கருவிகளுடன் தமிழ் முதலிய மொழிகளிற் புகழ்பாடித் தமது அஞ்ஞானந் தொலைய இறைவனைத் தொழுவார்கள். தமிழின் தன்மை, பெருமைகளைப் பேசிப் பாடல்கள் பாடுவார்கள். மாதர்களும் தமிழில் ஊறு பொருளைத் தேர்ந்து உணர்ந்திருந்தனர். தமிழ்க்கலை தெரிந்த பெரியோர் (தேவூரில்) இருந்தனர். சம்பந்தர் தம்மை “அருந்தமிழ் சுற்று முற்று மாயினான்” என இன்புடன் கூறுகின்ருர்.

82. தலங்கள் : தலங்களைப்பற்றிய குறிப்புக்கள் [225]

1. அகத்தியான் பள்ளி:- மயில் ஆலுகின்ற பொழிலாற் சூழப் பெற்றது. இத்தலத்தைச் சிந்தித்தாலும் தொழுதாலும் வினை தொலையும். இத்தலத்தைப் பாடிய சிந்தையார்க்குப் பாவம் இல்லை.

2. அச்சிறுபாக்கம்:- சுவாமி பெயர் : ஆட்சி கொண்டார். தேவி பெயர் : இளங்கிளை நாயகி. ஸ்தல விரக்ஷம்: கொன்றை.

3. திரு-அண்ணாமலை:- அண்ணாமலைச் சாரலில்- (1) அரவம், ஆளி, ஆனைத்திரள், ஏனத்திரள், கரடி, மான், பசு, எருமை இவையெலாம் இயங்கும்; (2) வழி