பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80. ஞானம், ஞான பூஜை, ஞான நெறி

83

ii. பிற விஷயங்கள்:- சூ ரி ய ன் - இயக்கம் உடையவன்; இருள் நீக்குபவன்; ஊழிவரையும் உலவுபவன்; உலகுய்ய (உதய) கிரியில் உதிப்பவன்; ஆயிரங் கதிர் உடையவன்; பகற்பொழுதை உண்டு பண்ணுபவன், ஒளியும் வெப்பமும் உடையவன், தக்க யாகத்திற் குட்டுண்டு பல்லனைத்தையும் இழந்தவன். சிவன் அட்ட மூர்த்தியாகலின் அவர்தம் மூர்த்தங்களுள் சூரியன் ஒன்று. அதனாற் சிவபிரான் ‘ஞாயிறாய நம்பன்’, ‘இரவிஆய பேராளன்’ எனப்பட்டார். சூரியன் இலங்கையின் மீது இயங்குதல் கூடாது என்பது இராவணனது கட்டளை. சூரியன் மகன் சடாயு.

iii, சூரியன் வழிபட்ட தலங்கள்:- அனேக தங்காபதம், சண்பை நகர் (சீகாழி), திரு நாகேச்சுரம், திரு முதுகுன்றம், திருவையாறு, திலதைப்பதி (மதி முத்தம்), தேவூர், மயேந்திரப்பள்ளி.

79. சொல்லழகு [221]

சொல்லழகு வாய்க்க வழியெதுகை மொழிகளைப் பல இடங்களில் நயம்படச் சுவாமிகள் எடுத்தாண்டுள்ளார்கள். உதாரணமாகச் சில காட்டுவாம். "இமையோரேத்த உமையோடிருந்தானே’, ‘எருக்கொடு முருக்கும்’, ‘எழில் பொழில் குயில் பயில்’, ‘நதி மதி பொதி சடை’, ‘மயிலுங் குயிலும் பயிலும்’, விட மடைதரு மிடறுடையவன்.’

80. ஞானம், ஞான பூஜை, ஞான நெறி [222]

விரதங்களால் வாடுதலால் ஞானம் வராது; எந்தை வாழும் திருவலஞ்சுழியை நாடிச் சம்பந்தப் பெருமானது செந்தமிழை இசையுடன் பாடும் ஞானம் வல்லாரது அடி சேர்வதே ஞானம். இறைவனை ஞானமாக நினைத்தால் நமது வினை நாசமாகும். ஞான விளக்கினை ஏற்றி இறைவனை வழிபடுவார்கள் மாட்டு இடர் வாாமல் அஞ்செழுத்து அவர்களைக் காக்கும்.