பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. தலங்கள் : தலங்களைப் பற்றிய குறிப்புக்கள் 105 வண்டு இசைபாட அதைக்கண்டு மயில் ஆடும்; யானைகள் வேயின் (மூங்கிலின்) கனியை எட்டிப் பற்றித் தாழ்த்தி விட்டுவிட அந்த அணி விசையிற் சென்று மேகத்தைக் H கீறும் ; வேடர் விறகிலிட்ட அகிற்புகை புனமெங்கும் மனங்கமழும். இம்மலை இறைவன் காதலித்து வாழும் மலை. கலந்தரு சிங்கையாய்ப் பாமாலை பாடும் அடியார் காதலுடன் வாழும் மலை. இக்கலத்தில், உயர்ந்த பக்தர் களும் சித்தர்களும் தம்மை இறைஞ்சி ஏத்த அவர் களுக்கு உற்ற இடர்களே இறைவர் விலக்கினர். 66. காட்டுப்பள்ளி-கீழை :-காவிரியின் பக்கத்தில் காவிரிக் காலின் கரையில் உள்ளது. வாழைக்கனி தேன் சொரிய மலர்த்தேன் மணங்கமழும். தாமரை, நீலம், நெய்தல் மலரும் பொய்கையில் கன்னியர் குடைவர் (குளிப்பர்). இது இறைவன் காதலிக்கும் தலம். இங்கு இறைவனைப் }+ Ф ті. நீருங்கொண்டு அடிதொழுங் தொண்டர் அருவினயைத் துரந்தவராவர். உம்பர்கள் தொழும் விடையேறும் பெருமானது பேச்சலது வேறு பேச்சு இலோம். அவர் கழலையே கைகூப்பித் தொழு வோம். அவர் கழலேயே வாழ்த்துவோம். 67. காட்டுப்பள்ளி - மேலே :- காவிரிக் கரையில் உள்ளது. கலைமான் உலவு முல்லை (புறவம்) கிலத்தது. பொழில் சூழ்ந்தது. இறைவன் கருதி யமர்கின்ற பதி. கணங்கள் கூடித் தொழு தே த் து ப தி. காட்டுப் பள்ளியைத் தொழ அல்லல் இல்லை : இன்பம் எய்தும் ; அத்தலத்தை வணங்கத் தவமது ஆம் காட்டுப்பள்ளியில் அமரும் இறைவனைப் போற்றுதலே பொருள். அவரை நாளு கின் றேத்துக. தேவி - வார்கொண்ட முலையம்மை 68. காவிரிப்பூம் பட்டினம் :-க டற் க ை ஊர். புகார், பட்டினம் எனப்படும். தாமரைப் பொய்கையை யும், படையார் மதிலையும் உடையது. மல்லிகை, புன்னை, குரவு இவை பந்தல்போலப் படர்ந்து அழகு தரும். வண்டு கேன் உண்டு பண் செய்யும். கடையார் மாடங்கள் கிறைந்து விளங்கின. பக்தர்களும், குற்றமற்றவர்களும்,