பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 தேவார ஒளிநெறிக் கட்டுரை (கோட்டான்) முாலும். வெள்ளிலின் (விளாமரத்தின்) மேல் கொடி படரும். ஊரார்கள் உபசார மொழியையும் நெறியையும் அதுஷ்டிப்பவர்கள். இறைவனுக்கு என்றும் உகந்த ஸ்தலம் கள்ளில். கள்ளிலை ஏத்தப் பேரின்பம் வரும், கள்ளிற் பெருமானுடைய அடியார் கட்குடியராய் இருப்பினும் அவர் பண்பை இகழ்பவர்கள் அறிவிலிகளே. கள்ளிற் பெருமான் திருவடியையே விரும்புங்கள். அவர் கழல்களை நாளும் கினைக்க உயர்வு அடைதல் நிச்சயம். கள்ளிற் பெருமான் மாதவக்கோர்க்கு உள்ள மலத்தினை அறுத்தருளுவர். 64. களர் :-உயர் பொழிலும், புன லும், வயலும், வாவிகளும் சூழ்ந்த அழகாய உளர். இக்கலக்கிற் சோலை யில் மதுவுண்டு வண்டினம் இசைசெய்யும்; மேசுஞ் சேர் பொழிலில் மயில் ஆஅம் கெங்கு, கமுகு குழ்ந்து விளங்கும். குன்றுபோற் பெரிய மாளிகைகள், மாடங்க ள், கொடிகள், கோபுரங்கள் வானே அ ளா வும். மாட மாளிகையில் மடவாருடன் ஆடவர் பயிலுவர்; பண்மொழி மங்கையர் கூடுவர்; யாழ்பயில் மங்கையரின் பாடலொலி பொலியும். தேரோடு வீதியில் திருவிழாக்கள் மல்கும். பாக்கியம் பலசெய்த பக்தர்களும், பாடல் முதலிய பலவித தொண்டுகளை விரும்பும் நல்லறி வாளரும் சிறந்துவாழ்வர். திருநீறு பூசிய தொண்டர் போற்ற, பாடவல்ல அன்பர்க ளொடு, அறிஞர்கள் மலர்கொண்டு போற்றுவர். வானவர் புதுமலரிட்டுத் தொழ போம்பலத்தில் இறைவர் கூத்துகந்து மாகடம் ஆடுகின்ருர் : இறைவர் திருநாமம்: அடைந்தார்க் கருளு காயர்ை . 65. கற்குடி :-கற்குடி மாமலை அமு கிய சோலை சூழ்ந்தது. இம்மலையில் -குறமாகரின் கையில் உள்ள குழந்தைகள் கிலவைப்பற்றும் ; கேழல் (பன் றி ) கிளைத்த ஒளி மணிகளை வேடர்கள் எடுத்துக் குவிப்பர் ; சந்தன மரத்தின் சிறையால் வேடர் கினை விதைத்து விளைவு செய்வர் ; பச்சை மூங்கிலின் முளையைவாரி ஆண் யானை பெண் யானையின் வாயில் கொடுக்கும் ; பொழிலில்