பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 தேவார ஒளிநெறிக் கட்டுரை பரிமள கந்தியாகச் செய்த பரமன் வாழுங் தலம். நட்டார் நடுவில் நந்தன் ஆண்ட திருப்பதி. அட்டதிக்குப் &Ꮧ MᎢ Ꭷh கர்களும் துாபதீபமொடு இறைவனைப் பணியும் ஊர். கொச்சையிறையவன் திருவடியை கினேய உய்யலாம். கொச்சை யண்ணலைக் கூடாதார் மூடமே : நெஞ்சமே ! அஞ்சாதே ! நீ கொச்சை என்னும் தலத்தைக் கருதுக ! பேனுக! .ெ க | ச் ைச இறைவனேயே உள் ளு க ! கொச்சையை மேவிப் பொருந்தினவருடைய அடியைப் போற்றி வாழுக கொச்சையை விரும்புவோர் தம் குணங்களைக் கூறிப் பாராட்டுக. கொச்சையை விரும்பி அடைந்து, தவநெறி அருளும் கம்பனை, நாளும் நம்புக. நெஞ்சமே! அஞ்சற்க ! நீ நாளும் கொச்சையை மருவில்ை பழநோய் தொடராது. 12. கழுமலம் :-கடற்கரை ஊர் ; அழகிய ஊர் : பழைய ஊர் : முக்கங்களை கடல் கரையிற் சொரியும். திரைகள் ஒன்ருே டொன்று மோதிக் ஆ இ ப ஏற்றும், ஊர்ப்புறத்திற் கழியும் கானலும் விளங்கும். கானல் நீழலில் கலைமான் இனங்கள் களித்து விளையாடும். கடற் புறத்திற் கண்டல், கைதை, நெய்தல் பொலியும் கன்னியர் கடல் நீராடுவர். சங்கமும் வங்கமும் கரைக்கு வரும், மலையினும் மிகப்பெரிய மரக்கலங்கள் சரக்கொடு வரும், பொழில் :-நறும் பொழில் சூழ்ந்த ஊர் : பொழில் மேகத்தை அளாவுவது. சந்தனக்காடும் மலர் களும் நிறைந்தது. பூமணங் கமழுவது. தாமரையில் உள்ள தேனை உண்டு வண்டுகள் களித்துச் சண்பகக் கானிற் போராடும். குருந்து, கோங்கு, கொடிமுல்லை, மல்லிகை, சண்பகம், வேங்கை இவைகளின் மலர்களை மாகர்கள் கொய்வர்: தவமுயல்பெரியோர் மலர்பறிக்கக் காழ்த்தும் கொம்பு அவர் பறித்து விட்டவுடன் மேலெழும்பி மாமரத்தில் மோத மாங்காய்கள் கவண்வீசு கல்லைப்போல சுனைக்கரையில் விழ அதைக்கண்டு கரையில் உள்ள பறவை கள் இரிந்து ஒடும். பொழிலில் விழ வொலி மலியும். ஊர்வளம் :-கழுமலத்துக்கு அரு கில் காவிரியின்